இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக மதுரை மருத்துவ மாணவர்கள் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

மதுரை - சென்னை:

உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை ஆதரித்து மதுரையில்மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஐ.ஐ.டி. உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் பிற்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதஇட ஒதுக்கீட்டை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் சில இடங்களில் மருத்துவக் கல்லூரிமாணவர்கள், மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந் நிலையில் இட ஒதுக்கீட்டை ஆதரித்து மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர்கள்இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரசு ராஜாஜி பொது மருத்துவமனை முன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, 27சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட மசோதாவை உடனடியாக தாக்கல்செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஐ.ஐ.டி. இட ஒதுக்கீடு: வீரமணி கோரிக்கை

இதற்கிடையே ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம். உள்ளிட்ட மத்திய அரசின் உயர் கல்விநிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவுதெரிவித்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றுதிராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டசமூகத்தினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இந்த முடிவை ஆதிக்க சக்திகள் எதிர்த்து வருகின்றன.

சில நூறு பேர் சேர்ந்து கொண்டு சில ஊடகங்கள் உதவியோடு போலியானபோராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இந் நிலையில் மத்திய அரசின் கரத்தை வலுப்படுத்த வேண்டியது தமிழகத்தின்கடமை. எனவே சட்டசபையில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை ஆதரித்து தீர்மானம்நிறைவேற்றப்பட வேண்டும்.

அப்படிச் செய்தால் மத்திய அரசுக்கு கூடுதல் பலம் கிடைக்கும் என்று கூறியுள்ளார்வீரமணி.

வைகோ ஆதரவு:

இந் நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள ஒருஅறிக்கையில்,

27 சதவீத இட ஒதுக்கீட்டை ஆதரித்து சென்னையில் மே 23ம் தேதி நடைபெறவுள்ளமனிதச் சங்கிலிப் போராட்டத்தில் மதிமுகவும் கலந்து கொள்ளும் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+