மீண்டும் சமத்துவபுரங்கள்: கருணாநிதி அறிவிப்பு
சென்னை:
அனைத்து ஜாதியினரும் சேர்ந்து வாழும் வகையில் மீண்டும் சமத்துவபுரங்கள்கட்டப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
மேலும் அதிமுக ஆட்சியில் பாழாக்கப்பட்ட உழவர் சந்தைகளும் மீண்டும்புதுப்பிக்கப்பட்டு முழு அளவில் செயல்படும் நிலைக்குக் கொண்டு வரப்படும்என்றும் அறிவித்துள்ளார்.
திருவாரூர் சென்றிருந்த முதல்வர் கருணாநிதி அங்கிருந்து சென்னை திரும்பும்வழியில் கடலூரில் சிறிது நிேரம் இளைப்பாறினார். அப்போது அங்குசெய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
![]() |
திமுக ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட பெரியார் சமத்துவபுரம், உழவர் சந்தைகள்ஆகியவற்றிற்கு புத்துயிர் கொடுத்து மீண்டும் அமல்படுத்துவோம்.
மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு உள்ளது. எனவே ஜூன் 12ம் தேதிவழக்கமான முறையில் அணையிலிருந்து காவிரிப் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்படும்.
வீராணம் ஏரியின் கரைகள் பலப்படுத்தப்பட்டு, வலுப்படுத்தப்படும். சேது சமுத்திரம்திட்டத்தை விரைவுபடுத்த தமிழக அரசு முயற்சி மேற்கொள்ளும்.
சென்னை அருகே கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த இப்போதுதான்சாதகமான நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசுடன் இணைந்துசெயல்பட்டு இந்த்த திட்டத்தை விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுப்போம்.
சுனாமி நிவாரண நிதியில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன. இதுகுறித்து உரியவிசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
![]() |
ரோட்டில் கருணாநிதி-ரங்கசாமி சந்திப்பு:
முன்னதாக திருவாரூரிலிருந்து புதுவை வழியாக சென்னை திரும்பிய கருணாநிதியைநடுரோட்டில் வைத்து சந்தித்தார் புதுவை முதல்வர் ரங்கசாமி.
புதுவை வழியாக கருணாநிதி வந்தபோது, கருவாடிக்குப்பம் என்ற இடத்தில்சாலையோரம் புதுவை முதல்வர் ரங்கசாமி காத்திருந்தார்
அந்த இடத்தில் கருணாநிதியின் வேன் வந்ததும் வேனை நிறுத்தி கருணாநிதிக்குமாலை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் ரங்கசாமி ஆசி கோரினார். இருவரும்பரஸ்பரம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.
அப்போது, சிவாஜி கணேசன் சிலையை புதுவை அரசு மிகச் சிறப்பாகஅமைத்துள்ளதாகவும், தமிழகத்தை புதுவை முந்திக் கொண்டு விட்டதாகவும்பாராட்டிய கருணாநிதி, சிலையை வடித்த சிற்பி குறித்த விவரங்களை தனக்குஅளிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
பின்னர் கருணாநிதி விடைபெற்று சென்னை திரும்பினார்.
எந்தவித இமேஜும் பாராமல், நடு ரோட்டில் காத்திருந்து, கருணாநிதியை சந்தித்தரங்கசாமியை காங்கிரஸார் மற்றும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பாராட்டினர்.














Click it and Unblock the Notifications