நள்ளிரவு கைது புகழ் காக்கிகள் மாற்றம்!
சென்னை:
முதல்வர் கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்தபோது அவரை முரட்டுத்தனமாககையாண்ட காவல்துறை அதிகாரிகள் ஜார்ஜ், கிறிஸ்டோபர் நெல்சன், சண்முகராஜேஸ்வரன் ஆகியோர் உப்புச் சப்பில்லாத பதவிகளுக்கு தூக்கிஅடிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2001ம் ஆண்டு ஜூன் மாதம் 29ம் தேதி ஜெயலலிதா அரசால் கருணாநிதிநள்ளிரவில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்தக் கைதில்முக்கியப் பங்குவகித்தவர்கள் அப்போது டிஐஜியாக இருந்த முகம்மது அலி, துணை ஆணையராகஇருந்த கிறிஸ்டோபர் நெல்சன், இணை ஆணையராக இருந்த ஜார்ஜ், துணைஆணையராக இருந்த சண்முக ராஜேஸ்வரன் ஆகியோர்.தற்போது திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் இந்த அதிகாரிகள் உப்புச் சப்பில்லாதஇடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
முகம்மது அலி முத்திரைத்தாள் மோசடி வழக்கில் சிக்கி சஸ்பெண்டு ஆகியுள்ளார்.
மற்ற மூவரில் கிறிஸ்டோபர் நெல்சன் வேலூர் சரக டிஐஜியாக இருந்து வந்தார்.தற்போது அவர் தண்ணி இல்லாக் காடு என காவல்துறையினரால் அழைக்கப்படும்மண்டபம் அகதிகள் முகாம் டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
மண்டபம் அகதிகள் முகாம் பணி என்பது காவல்துறையினர் போகத் தயங்கும்பணியிடமாகும். டிஐஜி பதவி என்றாலும் இங்கு அவருக்கு கார் கூட கிடைக்காது.வெறும் ஜீப் தான் தரப்படும்.
2001ல் ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்ற பின்னர் டிஜிபி அலெக்சாண்டரை கூடஇந்த இடத்திற்குத்தான் மாற்றினார். ரொம்ப நாட்களாக இந்தப் பதவியில்இருந்துவிட்டு பின்னர் அம்மாவின் அன்பைப் பெற்று சென்னைக்குத் திரும்பினார்.
கருணாநிதி கைது செய்யப்பட்டபோது முரசொலி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோரிடம்கடுமையாக நடந்து கொண்ட கிறிஸ்டோபர் நெல்சன் தற்போது மண்டபத்திற்குஅனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இதேபோல ஐஜி ஜார்ஜ் நாகர்கோவிலில் போக்குவரத்துக் கழக தலைமை லஞ்சகண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை தலைமையக ஐஜியாக இருந்து வந்த சண்முக ராஜேஸ்வரன், பழனியில்உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படையின் கமாண்டன்ட் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாற்றப்பட்ட பிற அதிகாரிகள் விவரம்:
மத்திய சரக ஐஜியாக ஜாபர் சேட் நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியில் இருந்து வந்ததமிழ்ச் செல்வன் மாற்றப்பட்டு விட்டார். இவர் வீரப்பனைக் கொன்றஅதிரடிப்படையில் இருந்தவர் என்பது நினைவிருக்கலாம்.
தென் மண்டல ஐஜியாக சஞ்சீவ் குமாரும், மதுரை மாநகர காவல்துறை ஆணையராகசிதம்பரசாமியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை தேர்தல் பிரிவு ஐஜி ராஜேந்திரன் பயிற்சிப் பிரிவு ஐஜியாகசென்னையிலேயே நியமிக்கப்பட்டள்ளார்.
நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் ஜெயந்த் முரளி சென்னை தலைமையடிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலம் சரக டிஐஜி ரவி வடசென்னை இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.அதிமுக ஆட்சிக்காலத்தில் ரவிக்கு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார்.
சென்னை பரங்கிமலை துணை ஆணையர் கலியமூர்த்தி வீராபுரம் தமிழ்நாடு சிறப்புக்காவல்படையின் கமாண்டன்ட் ஆக மாற்றப்பட்டுள்ளார்.
அம்பத்தூர் துணை ஆணையர் பாலதண்டாயுதபாணி, கோவைபுதூரில் உள்ளதமிழ்நாடு சிறப்புக் காவல்படை கமாண்டன்ட் ஆக மாற்றப்பட்டுள்ளார்.
கடலூர் எஸ்.பி. பன்னீர் செல்வம் ராஜபாளையம் தமிழ்நாடு சிறப்புக் காவல்படைகமாண்டன்ட் ஆக மாற்றப்பட்டுள்ளார். தேனி மாவட்ட எஸ்.பி. தினகரன் சென்னைசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications