துருவும் துக்கையாண்டி-அபயம் தேடும் சிவனாண்டி
சென்னை:
காவலர் தேர்வு வினாத்தாள் இருமுறை லீக் ஆனது தொடர்பான வழக்கு, சிபிசிஐடிஐ.ஜி துக்கையாண்டியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் காவலர் தேர்வுக்கான வினாத்தாள் 2 முறை வெளியாகி 2முறையும் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில்வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்என்று கோரப்பட்டுள்ளது.இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கைவிசாரித்த உச்சநீதிமன்றம், 6 மாதத்திற்குள் வழக்கை நடத்தி முடிக்க வேண்டும் என்றுதமிழக சிபிசிஐடி போலீஸுக்கு உத்தரவிட்டது.
இந் நிலையில் தமிழக சிபிசிஐடியின் சிறப்பு புலனாய்வுக் குழு இடைக்காலவிசாரணை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
மேலும் விசாரணையை முழுமையாக முடிக்க கால அவகாசம் தேவை என்றும் அதில்கோரப்பட்டிருந்தது.
இந்தப் பின்னணியில் கடந்த திமுக ஆட்சியில் ஜெயலலிதா மீதான ஊழல் புகார்களைவிசாரித்த துக்கையாண்டி, தற்போது சிபிசிஐடி ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து அவரது நேரடி மேற்பார்வையில் காவலர் தேர்வு வினாத்தாள் லீக்ஆன வழக்கு விசாரிக்கப்படவுள்ளது.
இந்த வழக்கில் முன்னாள் சட்டம் ஒழுங்கு டிஜிபி அலெக்சாண்டர், உளவுப் பிரிவுடிஐஜியாக இருந்து எஸ்.பியாக பதவி இறக்கம் செய்யப்பட்ட அதிமுக சிவனாண்டிஆகியோர் மீதும் புகார்கள் உள்ளன.
இதில் அலெக்ஸாண்டரின் ஆர்டர்லியாக இருந்த ஜீவரத்தினம் என்ற காவலர் ரயில்முன் பாய்ந்து இறந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இவர் கொலை செய்யப்பட்டதாகஒரு குற்றச்சாட்டு உள்ளது.
ஜீவரத்தினத்தை சிவனாண்டி அடித்து, உதைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதுவரை இந்த வழக்கில் மொத்தம் 18 போலீஸார் கைது செய்யப்பட்டுள்னர்.
துக்கையாண்டியின் துருவல் விசாரணையில் அலெக்ஸும், சிவனாண்டியும் நிச்சயம்தப்ப முடியாது என்று கூறப்படுகிறது.
இந் நிலையில் தான் கைதாக வாய்ப்புள்ளதாகக் கருதும் சிவனாண்டி, மெடிக்கல் லீவ்போட்டுவிட்டு சென்னையில் ஒரு மருத்துவமனையில் அட்மிட் ஆகிவிட்டார்.
மேலும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள திமுக விஐபிக்களைப் பிடிக்கும்வேலையிலும் அவர் இறங்கியுள்ளார். அங்கும் இங்குமாக முயன்றுவிட்டு கடைசியில்அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் வீட்டுக்கே சிவனாண்டி ஓடி வந்ததாகத் தெரிகிறது.
ஆனால், அவரைப் பார்த்த திமுகவினர் அவரை சூழ்ந்து கொண்டு சரமாரியாகத்திட்டியுள்ளனர். வீராசாமியும் அவரை சந்திக்க முடியாது என்று கூறிவிரட்டிவிட்டுள்ளார்.
இதையடுத்தே சிவனாண்டி மருத்துவமனையில் போய் படுத்துக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications