சபாநாயகராக பொறுப்பேற்றார் ஆவுடையப்பன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக சட்டசபை சபாநாயகராக ஆவுடையப்பன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.அவரைத் தொடர்ந்து துணை சபாநாயகராக வி.பி.துரைசாமியும் பொறுப்பேற்றார்.
சட்டசபை சபாநாயகர் தேர்தலில் திமுகவைச் சேர்ந்த ஆவுடையப்பன் மட்டும் மனுதாக்கல் செய்திருந்தார். இதேபோல துணை சபாநாயகர் பதவிக்கு வி.பி.துரைசாமிமட்டும் மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து இருவரும் போட்டியின்றிஇப்பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
![]() |
| சபாநாயகரை இருக்கையில் அமர வைக்கும் அன்பழகன், பன்னீர்செல்வம் |
இதையடுத்து இவர்கள் சபாநாயகர், துணை சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டதைசட்டசபை தற்காலிக சபாநாயகர் சுதர்சனம் இன்று காலை சட்டசபைக் கூட்டத்தில்முறைப்படி அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து ஆவுடையப்பன் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை அவைமுன்னவரான நிதியமைச்சர் அன்பழகன், எதிர்க்கட்சித் தலைவர் ஓ.பன்னீர் செல்வம்ஆகியோர் சபாநாயகர் இருக்கைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தனர்.இதையடுத்து வி.பி.துரைசாமியும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதன் பின்னர் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகரை வாழ்த்தி உறுப்பினர்கள்தற்போது பேசி வருகின்றனர்.













Click it and Unblock the Notifications