காங் கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேற்றம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து மதிமுகவெளியேற்றப்பட்டுள்ளது.

இக் கூட்டணியின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள மதிமுக பொதுச்செயலாளருக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. அதே போல பிரதமர் மன்மோகன்சிங் வழங்கும் விருந்து நிகழ்ச்சிக்கும் வைகோவுக்கு அழைப்பு வரவில்லை.

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சிஅமைந்து வரும் 22ம் தேதியுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதையொட்டிகூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தை காங்கிரஸ் கூட்டியுள்ளது. இதில் கலந்து கொள்ளதிமுக தலைவர் கருணாநிதி, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித்தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால், வைகோவுக்கு அழைப்பு வரவில்லை என்று தெரிகிறது.

22ம் தேதி இரவு பிரதமர் மன்மோகன் சிங் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்குவிருந்தளிக்கிறார். அதற்கும் வைகோ தவிர மற்றவர்களுக்கு அழைப்புஅனுப்பப்பட்டுள்ளது.

இதன் மூலம் வைகோவை அவரது காங்கிரஸ் ஸ்டைலிலேயே வெளியில்தள்ளியுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கொண்டேஅதிமுகவுடன் சைட் கூட்டணி அமைத்த வைகோ, திமுகவோடு மத்திய அரசையும்சேர்த்து தனது பிரச்சாரத்தில் விமர்சித்து வந்தார்.

அதே நேரத்தில் மத்திய கூட்டணியில் தொடர்ந்து நீடிப்போம் என்றும் சொல்லிகுழப்பி வந்தார் வைகோ.

தானே கிடைக்கும் ஆதரவை ஏன் இழக்க வேண்டும் என நிலையில் இருந்த காங்கிரஸ்தலைமை, மதிமுகவை கூட்டணியை விட்டு விலகச் சொல்லவும் இல்லை.வைகோவை நீக்கச் சொல்லி திமுக தரப்பில் இருந்து கொடுக்கப்பட்டநெருக்குதல்களை காங்கிரஸ் கண்டுகொள்ளவும் இல்லை.

வைகோ தொடர்ந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் நீடித்தால், திமுகஅக்கூட்டணியில் நீடிக்காது என்று தேர்தல் முடிவுகள் வரத் தொடங்கியபோதுமுதல்வர் கருணாநிதி மிரட்டல் பாணியில் பேட்டி அளித்திருந்தார்.

ஆனால் திமுகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்ற நிலைஉருவானபோது, வைகோ குறித்து காங்கிரஸிடம் நாங்கள் அவசரப்படுத்தத்தேவையில்லை, அவர்களுக்கே நிலைமை தெரியும் என்று கருணாநிதி பல்டிஅடித்தார்.

இந் நிலையில் டெல்லி கூட்டத்திற்கு வைகோவுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.

இதனால் கூட்டணியில் வைகோ இல்லை என்பதை அவரது ஸ்டைலிலேயே(குழப்பமான முறையில்) தெளிவுபடுத்தியுள்ளது காங்கிரஸ் தலைமை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+