For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாய்ப்பு-சபாநாயகருக்கு விஜயகாந்த் கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல், மக்கள் பிரச்சினைகளைப் பேச எனக்குஉரிய வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று நடிகர் விஜயகாந்த் சட்டசபையில்சபாநாயகர் ஆவுடையப்பனுக்குக் கோரிக்கை விடுத்தார்.

புதிய சபாநிாயகர் ஆவுடையப்பனை வாழ்த்தி தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த்பேசினார். அப்போது,

ஆளுங்கட்சி சார்பாக தேர்வு பெற்றவர் சபாநாயகர் என்றாலும் அவர் அனைத்துக்கட்சிகளுக்கும் பொதுவானவர். எதிர்க்கட்சிகளின் உரிமைகளை காப்பாற்ற கண்ணும்கருத்துமாக செயல்படுவார் என்று நம்புகிறோம்.

வழக்கறிஞராக அனுபவம் பெற்றவர் சபாநாயகர் என்பதால், ஒரு நீதிமன்றம் போலஇந்த அவையை நடத்துவார் என்று திடமாக நம்புகிறோம். இந்த அவைக்குவந்தவர்களில் நானும் புதியவன், எனது கட்சியும் புதியது. ஆனால் 28 லட்சம்மக்களின் ஆதரவைப் பெற்று இங்கே வந்திருக்கிறோம்.

எண்ணிக்கை சிறிதானாலும் தமிழக மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கவந்திருக்கிறோம்.

எனவே எத்தனை பேர் என்று பார்க்காமல், எத்தகையோர் என்று பார்ப்பதுதான்முக்கியம். இளைஞர்கள், பெண்கள் என்று ஏராளமான பொதுமக்களின் பிரதிநிதியாகதேமுதிக வந்துள்ளது.

ஆகவே மக்கள் பிரச்சினைகளைப் பேச உரிய வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றுகேட்டுக் கொள்கிறேன், சபாநாயகர், துணை சபாநாயகருக்கு எனது வாழ்த்துக்கள்என்றார் விஜயகாந்த்.

பாரபட்சம் இருக்காது: கருணாநிதி

முன்னதாக முதல்வர் கருணாநிதி பேசுகையில்,

நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்புகளைப் பெறுவதற்காக வாதாடிய இருவர் இன்று நல்லதீர்ப்பை வழங்குவதற்காக இந்த அவையின் தலைவராகவும், துணைத் தலைவராகவும்வந்திருக்கிறார்கள்.

தற்போதைய அவையின் தலைவர், ஏற்கனவே இந்த அவையின் தலைவராக இருந்துசிறப்பாக செயல்பட்ட நெல்லையைச் சேர்ந்த செல்லப்பாண்டியனின் மாணவனாகஇருந்து பயிற்சி பெற்றவர்.

செல்லப்பாண்டியன் இந்த அவையின் தலைவராக இருந்தபோது நானும் எதிர்க்கட்சிஉறுப்பினராக இருந்துள்ளேன். அவர் கண்டிப்பு, கனிவு காட்டி நிர்வாகத்திலும், அவைநடத்தும் பாங்கிலும் தனித்தன்மையோடு விளங்கியவர்.

இப்போது ஆளுங்கட்சி சுமார் 140 இடங்களை இழந்துள்ளது. எதிர்க்கட்சி 70ஐத்தாண்டவில்லை. ஆனாலும் கூட சட்டமன்ற ஜனநாயகத்தைக் காப்பாற்றுகிறவகையில், எதிர்க்கட்சிகளின் கருத்துக்களுக்கு நாங்கள் உரிய வாய்ப்பளிப்போம்.இந்த அவையை சிறந்த முறையில் நடத்துவதற்கு நாங்கள் முழு ஒத்துழைப்புஅளிப்போம்.

புதிய எம்.எல்.ஏக்கள் அவைக் குறிப்புகளைப் படித்து, எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதற்கு பயிற்சியை பெற வேண்டும் என்றார் கருணாநிதி.

ஓ.பி. பேச்சு:

எதிர்க்கட்சித் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், இந்த அவையில் இதற்குமுன்பு பணியாற்றிய மாமேதைகள், தமிழாய்ந்த தமிழ் அறிஞர்கள் வழி நடந்துநீங்களும் வரலாற்றில் தனி இடம் பிடிக்க வேண்டும். கோடிக்கணக்கான மக்கள்நம்மை தேர்வு செய்து இந்த அவைக்கு அனுப்பியிருக்கிறார்கள்.

அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அனைவருக்கும் உரிய வாய்ப்பு அளிக்கவேண்டும். தமிழக நலன் காக்க நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்றார்.

இதேபோல காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் சுதர்சனம், பாமக தலைவர் ஜி.கே.மணி,மதிமுக தலைவர் கண்ணப்பன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் செல்வம்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் கோவிந்தசாமி, இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்சிவபுண்ணியம், சுயேச்சை உறுப்பினர் ராமச்சந்திரன் உள்ளிட்டோரும் சபாநாயகரைவாழ்த்திப் பேசினர்.

இறுதியில் ஆவுடையப்பன் பேசுகையில், ஆளுங்கட்சியை ஒரு கண்ணாகவும்,எதிர்க்கட்சியை இன்னொரு கண்ணாகவும் கருதி செயல்படுவேன். அனைத்துக் கட்சிஉறுப்பினர்களுக்கும் எனக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

மீண்டும் 24ம் தேதி கூடும் சட்டசபை:

இதைத் தொடர்ந்து சட்டசபை இன்று ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் 24ம் தேதிஆளுனர் உரையுடன் சபை கூடுகிறது.

ஆளுநர் உரைக்குப் பின்னர் அன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்படும். அதன் பின்னர்அலுவல் ஆய்வுக் குழுக் கூடி சட்டசபையை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்றுமடிவு செய்யும்.

மறுநாள் ஆளுநர் உரை மீதான விவாதம் தொடங்கும். விவாதத்தின் இறுதியில்முதல்வர் கருணாநிதி பதில் அளித்துப் பேசுவார்.

இந்தக் கூட்டத் தொடரிலேயே தமிழக அரசின் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X