சென்னை போலீஸ் கூடுதல் கமிஷனரானார் ஜாங்கிட்
சென்னை:
சென்னை மாநகர காவல்துறை கூடுதல் ஆணையராக தமிழகத்தின் மிகச் சிறந்தகாவல்துறை அதிகாரி என பெயர் பெற்ற ஐ.ஜி. ஜாங்கிட் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் மேலும் 6 காவல்துறை அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். வடக்குமண்டல ஐ.ஜியாக பணியாற்றி வந்த ஜாங்கிட், சென்னை மாநகர கூடுதல் காவல்ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.வடக்கு மண்டல ஐஜியாக இருந்தபோது தமிழகத்தையே உலுக்கிய, கும்மிடிப்பூண்டிஅதிமுக எம்.எல்.ஏ. சுதர்சனம், சேலம் காங்கிரஸ் தலைவர் தாளமுத்து நடராஜன்உள்ளிட்ட முக்கிய கொலை வழக்குகளில் தொடர்புடைய வட நாட்டுக் கொள்ளைக்கும்பலை வட மாநிலங்களில் போய் தேடிப் பிடித்து அவர்களுக்கு தூக்குத் தண்டனைவாங்கித் தந்தவர் ஜாங்கிட்.
மிகச் சிறந்த அதிகாரியான ஜாங்கிட் தூத்துக்குடி மாவட்ட காவல்துறைகண்காணிப்பாளராக பணியாற்றியபோது அங்கு ரவுடிகளுக்கும், கொள்ளைக்கும்பலுக்கும் பெரும் சிம்ம சொப்பனமாக விளங்கியவர்.
ஆனால், இவருக்கும் சசி கும்பலுக்கு ஆதரவான சில போலீஸ் அதிகாரிகளுக்கும்இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இவரை சென்னையில் இருந்து தூக்கிஅடித்தது சசிகலா வட்டாராம்.
நீண்ட நாட்களாக முக்கிய பதவிகள் மறுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு வந்தார். ஆனால்,எந்தப் பணி தந்தாலும் அதில் சிறப்பாகப் பணியாற்றியவர் ஜாங்கிட். அந்த வகையில்தான் வடக்கு மண்ட ஐஜியாகவும் சிறப்பாக பணியாற்றினார்.
இப்போது இவர் சென்னை மாநகர் கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளதன்மூலம் சென்னை நகர காவல்துறைக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது.
அதே போல அமலாக்கப் பிரிவு கூடுதல் டிஜிபியாக இருந்து வந்த உபாத்யாய், லஞ்சஊழல் ஒழிப்பு இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். அப்பதவியில் இருந்து வந்தகூடுதல் டிஜிபி நாஞ்சில் குமரன் அமலாக்கப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கூடுதல் டிஜிபி திலகவதியின் கணவர் தான் நாஞ்சில் குமரன். ஆனால், இருவரும்பிரிந்து வாழ்கின்றனர். அதிமுக ஆட்சியில் குமரன் வழக்கமாகவே ஒதுக்கியேவைக்கப்படுவது வழக்கம். தற்போது முக்கியமான அமலாக்கப் பிரிவுக்கு அவர்மாற்றப்பட்டுள்ளர்.
சென்னை மாநகர கூடுதல் ஆணையராக இருந்து வந்த டி.கே.ராஜந்திரன் லஞ்ச ஊழல்ஒழிப்புப் பிரிவு சிறப்பு புலனாய்வுப் பிரிவின் ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
இப்பிரிவில் ஐஜியாக இருந்து வந்த ராதாகிருஷ்ணன், வடக்கு மண்டல ஐஜியாகநியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாநகர காவல்துறை ஆணையராக இருந்து வந்த நரேந்திர பால் சிங் சென்னைலஞ்ச ஒழிப்புப் பிரிவு இணை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications