அரசு வக்கீல் பதவி-அலை மோதும் காங், பாமக

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் தலைமை அரசு வழக்கறிஞர் உள்ளிட்ட அரசுவழக்கறிஞர் பதவியிடங்களைப் பிடிக்க காங்கிரஸ், பாமக இடையே கடும் போட்டிஏற்பட்டுள்ளது. இதனால் திமுக தரப்பு தர்மசங்கடத்தில் ஆழ்ந்துள்ளது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து அரசு வழக்கறிஞர்கள் பலர் ராஜினாமாசெய்துள்ளனர். தமிழக அரசின் தலைமை அரசு வழக்கறிஞராக இருந்து வந்தஎன்.ஆர்.சந்திரன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அப்பொறுப்பில்திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் விடுதலை நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதவிர, சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் தலைமை அரசு வழக்கறிஞர், அரசுவழக்கறிஞர்கள், கூடுதல் அரசு வழக்கறிஞர்கள், அரசு பிளீடர் உள்ளிட்டபதவிகளுக்கு புதிய வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டியுள்ளது.

இந்தப் பதவிகளுக்கு பொதுவாக ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள்தான்நியமிக்கப்படுவர். தற்போது சிறுபான்மை பலத்துடன் கூட்டணி கட்சிகளின்ஆதரவுடன் திமுக ஆட்சி அமைத்துள்ளதால் திமுகவினரைத் தவிர காங்கிரஸ், பாமகஆகிய கட்சிகளும் அரசு வழக்கறிஞர் பதவிகளை பெற மும்முரம் காட்டி வருகின்றன.

இப்பதவிகளுக்கான பட்டியல் தயாரக்கப்பட்டு முதல்வர் கருணாநிதியிடம்வழங்கப்பட்டு விட்டது. ஆனால் பாமக மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிெருக்குதல்ஜாஸ்தியாக இருப்பதால் பட்டியலை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இடையில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் இறந்து விட்டதால் பட்டியலைஇறுதி செய்யும் பணியில் கருணாநிதி இறங்க மேலும் கால தாமதம் ஆகும் எனத்தெரிகிறது.

மேலும் தமிழக அரசு இப்பட்டியலை இறுதி செய்த பின்னர் அதை உயர்நீதிமன்றதலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

தலைமை நீதிபதி இப்பட்டியலை ஓ.கே. செய்த பின்னர்தான் புதிய நியமனங்கள்அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட முடியும். தற்போது உயர்நீதிமன்றத்திற்கு கோடைவிடுமுறை என்பதால் இந்த நியமனங்கள் மேலும் தாமதமாகும் என்று தெரிகிறது.

அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் முதல் அரசு பிளீடர் வரை அனைத்துப்பதவிகளும் தற்போது காலியாக உள்ளதால் பல்வேறு வழக்குகளின் விசாரணைதாமதமாகும் என்று தெரிகிறது.

கூடுதல் தலைமை வழக்கறிஞர் பதவிக்கு டி.ஆர். ராஜகோபாலனின் பெயர் முதலில்பரிசீலிக்கப்பட்டது. ஆனால் இவருக்கு ஜெயேந்திரருடன் நெருங்கிய தொடர்புஇருப்பதால் அவரது பெயர் அடிபட்டு விட்டது.

கடந்த திமுக ஆட்சியில் இவர்தான் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞராக இருந்தார்என்பது குறிப்பிடத்தக்கது. திமுக ஆட்சியில்தான் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்பதவியே உருவாக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பதவிக்கு மேலும் 2பேரை நியமித்தது.

கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் பதவிக்கு தற்போது திமுகவைச் சேர்ந்தஎஸ்.ராமசாமி, உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்த ராஜாஇளங்கோ, கூடுதல் அரசு வழக்கறிஞர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்தஎன்.ஆர்.இளங்கோ, அரசு பிளீடர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்த ஹாஜா நஸ்ருதீன்ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன.

மற்ற பதவிகள் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், பாமக ஆகியவற்றிற்குக்கிடைக்கும் எனத் தெரிகிறது. இதற்கிடையே, தற்போதைக்கு வழக்குகளை சமாளிக்கஅரசு வழக்கறிஞர்களாக என்.ஆர்.இளங்கோ, பாபு முத்துமீரான், வி.ஆர்.பலராமன்,முனியப்பராஜ் ஆகியோரை தமிழக அரசு நியமித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+