தா.கியின் தம்பி மகனை கொல்ல முயற்சி
சிவகங்கை:
மதுரையில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணனின்நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பிய அவருடைய தம்பி மகனைகத்தியால் குத்திக் கொல்ல முயற்சி நடந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர்தப்பினார்.
கடந்த திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த தா.கிருட்டிணன், மதுரையில் கடந்த 3ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் படுகொலை செய்யப்பட்டார். திமுக கோஷ்டிமோதலில் அவர் கொலை செய்யப்பட்டதாக அப்போது கூறப்பட்டது.இதுதொடர்பாக அழகிரி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந் நிலையில் சிவகங்கை மாவட்டம் கொம்புக்காரனேந்தல் கிராமத்தில் உள்ளதா.கியின் நினைவிடத்தில் அவரது 3வது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சிகள் நடந்தன.இந்த நிகழ்ச்சியில் தா.கியின் உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தஞ்சையிலிருந்து வந்திருந்த உறவினர்கள், நினைவு நாள் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு இரவு ஊருக்குக் கிளம்பினர்.
அவர்களுடன் தா.கிருட்டிணனின் தம்பி ராமையாவின் மகன் நெடுஞ்செழியனும்உடன் சென்றார். நெடுஞ்செழியனுக்கு கொலை மிரட்டல் இருப்பதால் அவருக்குபாதுகாப்பாக 3 போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுடன் நெடுஞ்செழியன் சென்று கொண்டிருந்தனர். முத்தனேந்தல் விலக்குஎன்ற இடத்தில் அவர்கள் வந்தபோது, கள்ளச்சாராய வியாபாரியான நல்லுச்சாமிஎன்பவர் அங்கு வந்தார்.
நெடுஞ்செழியன் மீது பாய்ந்த அவர் கத்தியால் அவரைக் குத்திக் கொல்லமுயற்சித்தார். இதையடுத்து அருகில் இருந்த காவலர் செந்தில்குமார் சுதாரித்துக்கொண்டு துப்பாக்கியால் நல்லுச்சாமியை சுட்டார்.
இதில் நல்லுச்சாமியின் தோளில் குண்டு பாய்ந்தது. நல்லுச்சாமி தாக்கியதில்காவலர்கள் 3 பேரும் காயமடைந்தனர்.
காயமடைந்த நல்லுச்சாமி மற்றும் காவலர்கள் மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்டுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications