நாய் மீது ஆசிட் ஊற்றிய வாலிபர் கைது!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பக்கத்து வீட்டு நாய் மீது அமிலம் ஊற்றிய 17 வயது வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் அகில இந்திய பிராணி நலச் சங்கம்சார்பில் ஒரு புகார் மனு கொடுக்கப்பட்டது.

அதில், ராஜன் என்பவரின் வீட்டில் டிம்மி என்ற நாய் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்தநாய் மீது ஆத்திரம் கொண்ட பக்கத்து வீட்டைச் சேர்ந்த 17 வயது வாலிபர்,கோபத்தில், நாய் மீது அமிலத்தை ஊற்றியுள்ளார்.

இதில் நாயின் முகம், தலை,முதுகு ஆகிய பகுதிகள் வெந்து போய் விட்டன.வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாய்தற்போது மெதுவாக குணமடைந்து வருகிறது.

இதுதொடர்பாக அந்த சிறுவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகோரப்பட்டிருந்தது.

புகாரை விசாரித்த போலீஸார் சம்பந்தப்பட்ட சிறுவனை அழைத்து விசாரணைநடத்தினர். விசாரணைக்குப் பின்னர் கெல்லீஸில் உள்ள சிறுவர் காப்பகத்தில் சிறுவன்அடைக்கப்பட்டான்.

இச்சம்பவம் இந்தியாவிலேயே இதுவரை நடந்திராத ஒன்று என கூறப்படுகிறது.இதுகுறித்து நாயின் உரிமையாளர் ராஜனின் மகள் ராணி (இருவரது பெயர்களும்மாற்றப்பட்டுள்ளது) கூறுகையில், நாங்கள் எங்கள் வீட்டில் நாயிடம் பந்தைப் போட்டுவிளையாடுவோம்.

சில சமயங்களில் பந்து அந்த வாலிபர் வீட்டு வாசலில் போய் விழும். அப்படிவிழும்போது அவர் பந்தைத் திருப்பித் தர மாட்டார்.

மேலும், உங்களது நாய் என்னை அடிக்கடி துரத்திக்கொண்டிருக்கிறது, என்னைப்பார்த்து சத்தமாக குரைக்கிறது. இது நன்றாக இல்லை என்று கோபமாக கூறுவார்.

ஆனால் எங்களது நாய் அப்படியெல்லாம் செய்யாது. அமைதியாக இருக்கும். நாய்மீது கொண்ட கோபத்தில் அந்த வாலிபர் இப்படிச் செய்வார் என்று நாங்கள்எதிர்பார்க்கவில்லை.

சம்பவ நாளன்று நாய் சுருண்டு படுத்துக் கிடந்தது. மிகவும் கஷ்டப்பட்டு முணகிக்கொண்டிருந்தது. இதையடுத்து எனது தாயார் நாயைத் தொட்டுப் பார்த்தார்.

அப்போது அவரது கையில் அரிப்பு ஏற்பட்டு தகதகவென எரிச்சல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று

பரிசோதித்தபோதுதான் நாய் மீது அமிலம் ஊற்றப்பட்டிருந்தது தெரிய வந்தது.இதையடுத்து அகில இந்திய பிராணிகள் நலச் சங்கத்தில் புகார் செய்தோம். அவர்கள்காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்கள்.

இப்படி ஒரு கொடூரமான செயலை நான் உலகில் எங்கேயும் கேள்விப்பட்டதில்லைஎன்றார் ராணி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+