கலைஞரின் கைமாறு- ஸ்டாலின் புது விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கலைஞரின் கைமாறு என்ற பெயரில் ஜெயா டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிக்குபுதிய விளக்கம் அளித்துள்ளார் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின்.

சென்னை தி.நகரில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான சர்.பிட்டி.தியாகராயர்அரங்கத்தை ஸ்டாலின் இன்று சுற்றிப் பார்த்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர்பேசுகையில்,

இந்த அரங்கத்தை கடந்த 2001ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி முதல்வர் கருணாநிதி திறந்துவைத்தார். ரூ 75.86 லட்சம் செலவில் இந்த அரங்கம் கட்டப்பட்டது.

சமூக, கலாச்சார, இலக்கிய நிகழ்ச்சிகளைக் குறைந்த கட்டணத்தில் நடத்திபொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த அரங்கம்கட்டப்பட்டது. ஒரு நாளைக்கு ரூ. 4,500 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட்டுவந்தது.

இதன் மூலம் மாநகராட்சிக்கு மாதந்தோறும் ரூ. 60,000 முதல் 70,000 வரைவருமானம் கிடைத்து வந்தது.

அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு கட்டடத்தில் மின்கசிவு ஏற்பட்டு விட்டதாக கூறிஅரங்கத்தை மூடி விட்டார்கள். ஆனால் உண்மையான காரணம் என்னவென்றால்,திமுக மற்றும் தோழமைக் கட்சிகளின் நிகழ்ச்சிகள் அதிக அளவில் நடந்ததால்தான்அரங்கத்தை மூடினார்கள்.

அதுதவிர, விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய, ராஜீவ் காந்தி கொலை வழக்கில்,சம்பந்தப்பட்ட நளினியின் சகோதரர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி 17.9.2004 அன்றுஇதே மண்டபத்தில்தான் நடந்திருக்கிறது. இதில் நளினியும் கலந்து கொண்டார்.

தேர்தல் நேரத்திலும், தேர்தல் முடிந்த பிறகும் கலைஞரின் கைமாறு என்று ஒருநிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள். (நளினியின் உறவினர்களுக்கு கருணாநிதி தனதுபடத் தயாரிப்பில் முக்கியத்துவம் தந்து உதவி செய்ததாக அந்த நிகழ்ச்சி புகார்கூறப்பட்டது) அந்த நிகழ்ச்சியில் நளினியின் சகோதரர் திருமணம் பற்றிய ஒருகிளிப்பிங்கும் இடம் பெற்றுள்ளது.

அந்தத் திருமணம் அதிமுக ஆட்சியின்போது இதே அரங்கத்தில்தான் நடந்திருக்கிறது.எனவே அது கலைஞரின் கைமாறு அல்ல, ஜெயலலிதாவின் கைமாறு.

இந்த அரங்கத்தை இப்போது சீரமைத்து வருகிறோம். அரங்கத்தின் மேல் தளத்தில் ரூ.13.80 லட்சம் செலவில் சமையல் அறை, உணவுக் கூடம் ஆகியவைஅமைக்கப்படுகிறது. இவை கட்டப்பட்டு விட்டால் இங்கே கல்யாணங்களைக் கூடநடத்த முடியும்.

ஜூலை மாதத்தில் புதிய பொலிவுடன் இந்த அரங்கம் திறக்கப்பட்டு விடும்.

நான் சென்னை மேயராக இருந்தபோது 9 மேம்பாலங்கள் கட்டப்பட்டன. பெரம்பூர்பாலம் மட்டும் தொழில்நுட்பக் காரணங்களினால் தாமதமானது. இதனிடையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. பின்னர் பெரம்பூர் பாலப் பணிகளை அப்படியே நிறுத்திவிட்டார்கள்.

மேலும் பாலம் கட்டியதில் ஊழல் நடந்திருப்பதாக கூறி விசாரணைக் கமிஷன்போட்டார்கள். அந்த கமிஷன் அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்து விட்டது. அதைசட்டசபையிலோ, மக்கள் மன்றத்திலோ அதை அதிமுக அரசு வைக்கவில்லை.

இப்போது அந்த அறிக்கை புலனாய்வுத் துறையிடம் இருப்பதாகத் தெரிகிறது. பாலகட்டுமானப் பணி தொடர்பான தடைகளை சட்டப்பூர்வமாக நீக்கிய பின்னர் பாலம்கட்டும் பணி மீண்டும் தொடங்கப்படும் என்றார் ஸ்டாலின்.

அவருடன் துணை மேயர் கராத்தே தியாகராஜன், மாநகராட்சி ஆணையர்விஜயக்குமார் உள்ளிட்டோரும் சென்றிருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+