காதல் தோல்வியால் பெண் போலீஸ் தற்கொலை
கடலூர்:
காதல் தோல்வியால் மனமுடைந்த சென்னை பெண் போலீஸ் தனது காதலன் வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.
நாகை மாவட்டம் மாவிளந்தையைச் சேர்ந்த ராஜமாணிக்கம். இவரது மகள் ஷகிலா (22). இவர் சென்னைவீராபுரத்தில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் 5வது படைப்பிரிவில் பணியாற்றி வந்தார்.இவர், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மணத்துணைநாதன் (28) என்பவரை காதலித்து வந்தார். மணத்துணைநாதன்,கடலூர் ஏர்டெல் நிறுவனத்தில் என்ஜினியராகப் பணியாற்றி வருகிறார். இவர் கடலூர் வள்ளலார் நகரில் வாடகைவீட்டில் வசிக்கிறார்.
மணத்துணைநாதனும், ஷகிலாவும் ஒரு வடருமாக காதலித்து வந்தனர். நேற்று ஷகிலா தன் காதலன் வீட்டில் தங்கி,தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்ததால் இருவருக்கும் தகராறுஏற்பட்டது.
இதில் மனம் உடைந்த ஷகிலா தனது காதலன் வீட்டின் ஒரு அறையில் சென்று கதவை தாழிட்டுக்கொண்டார்.மறுநாள் கோபம் தணிந்துவிடும் என்று நினைத்து மணத்துணைநாதன் வெளியில் இருந்த அறையில் தூங்கினார்.காலையில் ஷகிலா வெகுநோரமாக வெளியில் வாரததால் சந்தேகமடைந்த மணத்துணைநாதன் அறையின் கதவுதுவாரம் வழியாகப் பார்த்தபோது ஷகிலா தூக்கில் பிணமாகத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பிறகு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஷகிலா உடலை பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஷகிலா தனது தற்கொலைக்கு முன்பு கடிதம் எழுதி வைத்ததாகத் தெரிகிறது. அதில் காதல் தோல்வியால்தற்கொலை செய்வதாக ஷகிலா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications