டெஸ்மா டமார்-வெடி போட்ட அரசு ஊழியர்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
டெஸ்மா, எஸ்மா நீக்கம் மற்றும் அரசுப் பணிகளில் காலியிடங்களை நிரப்ப அரசுமுடிவெடுத்துள்ளதை சென்னையில் உள்ள பல்வேறு அரசு ஊழியர் சங்கத்தினர்பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.
சட்டசபையில் இன்று ஆளுனர் ஆற்றிய உரையில் அரசு ஊழியர்கள் தொடர்பாக பலவிஷயங்கள் இடம் பெற்றுள்ளன. டெஸ்மா, எஸ்மா சட்டங்கள் நீக்கம், அரசுப்பணியில் சேருவதற்கான வயது வரம்பு நீட்டிப்பு,அரசுப் பணி காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும், தொகுப்பூதிய முறை முற்றிலும்நீக்கப்பட்டு ஊழியர்கள் நிரந்தரமாக்கப்படுவார்கள் போன்ற அறிவிப்புகளை அரசுஊழியர் சங்கங்கள் வரவேற்றுள்ளன.
அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட, பிரிட்டிஷார் காலத்து ரெளலட்சட்டத்திற்கு இணையான டெஸ்மா சட்டம் நீக்கப்படுவதை வரவேற்பதாக அரசுஊழியர்கள், ஆசிரியர் சங்கம் கூறியுள்ளது.
ஆளுனர் உரை அறிவுப்புகளை வரவேற்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பல்வேறுஅரசு ஊழியர் சங்கத்தினரும் இன்று பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடினர்.












Click it and Unblock the Notifications