பிளஸ் டூ: ஒரே வகுப்பில் ஒரே பாடத்தில் 16 பேர் தோல்வி!

Subscribe to Oneindia Tamil

சிவகாசி:

சிவகாசி அருகே திருத்தங்கல் அரசு மேல் நிலைப் பள்ளியில் பிளஸ் டூ தேர்தலில் வரலாறு பாடத்தில் 16 மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர்.

திருத்தங்கல் அரசு மேல் நிலைப் பள்ளியில் 265 மாணவ, மாணவியர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில் 223 பேர் தேர்ச்சி பெற்றனர்.

இப்பள்ளியை சேர்ந்த மதன்குமார் 1,125 மார்க் பெற் சாதனை படைத்துள்ளார். மேலும் 2 மாணவர்கள் 1,000க்கும் அதிகமான மதிப்பெண்கள்பெற்றுள்ளனர்.

ஆனால், இந்தப் பள்ளியில் அரசியல் அறிவியல் பிரிவில் படித்து தேர்வு எழுதிய 66 பேரில் 47 மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர்.

19 பேர் பெயில் ஆகியள்ளனர். இதில் 16 பேர் வரலாறு பாடத்தில் தோல்வியைத் தழுவியுள்ளனர்.

ஒரே குரூப்பில் ஒரே பாடத்தில் 16 பேர் தோல்வி அடைந்தது பள்ளியிலும் பெற்றோர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பள்ளியில் பிளஸ்ஒன் பயிலும் இந்த குரூப்பைச் சேர்ந்த மாணவர்களும் பெற்றோரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஒரே பாடத்தில் 19 மாணவர்கள் தோல்வி அடைந்தற்கு அந்தப் பாடப் பிரிவின் ஆசிரியரே காரணம் என்று புகார் கிளம்பியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+