For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுக மாஜி பெண் எம்எல்ஏ பால்காரருடன் ஓட்டம்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. கருப்பாயியை பால்காரர் கடத்திக் கொண்டு போய்விட்டதாக கருப்பாயியின் கணவர் கருப்பையா சென்னை மாநகர காவல்துறைஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார்.

கொளத்தூர் தொகுதி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. கருப்பாயி. அவர் தொடர்பாககடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு சர்ச்சைகள்.

கணவர் தன்னைக் கொடுமைப்படுத்துவதாகவும், தன்னை எம்.எல்.ஏ விடுதியில்வைத்து கருப்பையா கற்பழிக்க முயன்றதாகவும் (கணவரே கற்பழிக்க வந்தாராம்),கொலை செய்ய முயன்றதாகவும் மகளிர் காவல் நிலையத்தில் கருப்பாயி புகார்கொடுத்தார்.

அதன் பேரில் கருப்பையா கைது செய்யப்பட்டார். ஆட்சி, அதிகாரத்தைக் கொண்டுதன்னை கருப்பாயி பழிவாங்குவதாக கருப்பையா அப்போது குற்றம் சாட்டினார்.

இந் நிலையில் கருப்பாயி மீது சென்னை மாநகர காவல்துறை ஆணையர் லத்திகாசரணிடம் கருப்பையா பரபரப்பு புகார் ஒன்றைத் தெரிவித்துள்ளார். அந்தப் புகாரில்,

எனது மனைவி ரோகினி என்ற கருப்பாயி (வயது 48) முன்னால் அதிமுக எம்.எல்.ஏஆவார். எங்களுக்கு கவுசல்யா (17), செந்தமிழ்ப் பாவை (8)ஆகிய இரு மகள்கள்உள்ளனர்.

கீரனூரில் நாங்கள் வசித்து வந்தோம். அப்போது எங்களது வீட்டிற்கு ஜான் பீட்டர்என்பவர் பால் ஊற்றி வந்தார். பணம், காசுக்கு ஆசைப்பட்டு ஜான் பீட்டர் எனதுமனைவியிடம் நைச்சியமாக பேசி பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.கள்ளத்தனமாக இருவரும் பழகி வந்தனர்.

இதை நான் கண்டித்தபோது, எம்.எல்.ஏ. என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி என் மீது,ஜான் பீட்டர் தூண்டுதலின்பேரில் பல பொய்யான வழக்குகளை தொடுத்தார்கருப்பாயி.

இதன் பேரில் நான் கைது செய்யப்பட்டு 100 நிாட்களுக்கும் மேலாக சிறையில்அடைக்கப்பட்டேன். ஜாமீனில் வெளியே வந்த என் மீது கற்பழிக்க முயற்சிசெய்ததாக பொய்யான புகாரைக் கொடுத்தார் கருப்பாயி. இதிலும் நான் கைதுசெய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்தேன்.

பின்னர் விவாகரத்து கோரி புதுக்கோட்டை நீதிமன்றத்தில் கருப்பாயி வழக்குதொடர்ந்தார். பின்னர் மனம் மாறி என்னுடன் சேர்ந்து வாழ்வதாகத் தெரிவித்தார்.

இந் நிலையில், தற்போது கருப்பாயி, எனது மகள்கள் ஆகியோரைக் காணவில்லை.அவர்களை எங்கு தேடியும் காணவில்லை. 3 பேரையும் ஜான் பீட்டர்தான் ஆசைவார்த்தைகளை கூறி கடத்திச் சென்றிருக்க வேண்டும் என்று சந்தேகிக்கிறேன்.

எனது மகள்களின் எதிர்காலம் குறித்து எனக்கு பயம் ஏற்பட்டுள்ளது. அவர்களதுஉயிருக்கும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாக அஞ்சுகிறேன்.

எனது மனைவி, மகள்களைக் கடத்தி வைத்துக் கொண்டு அவர்களை நான் கொல்லமுயற்சித்ததாக கூற என் மீது பொய்யான புகாரை அந்தக் கும்பல் சுமத்தமுயற்சிக்கலாம்.

எனவே எனது மனைவி மற்றும் மகள்களை ஜான் பீட்டரின் பிடியிலிருந்து மீட்டுஎன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தனது புகாரில் கருப்பையா கூறியுள்ளார்.

மனைவியை பால்காரர் கடத்திச் சென்று விட்டதாக முன்னாள் எம்.எல்.ஏவின் கணவர்கொடுத்துள்ள இந்தப் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X