3 கலெக்டர்கள் உள்பட 14 ஐஏஎஸ்கள் மாற்றம்
சென்னை:
3 மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உள்பட மேலும் 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் அதிகாரிகள் மட்டத்தில் தொடர்ந்துமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந் நிலையில் நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவராக ராமலிங்கம்நியமிக்கப்பட்டுள்ளார். தஞ்சை மாவட்ட ஆட்சியராக விஜய ராஜ்குமாரும்,திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக ரன்வீர் பிரசாத்தும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எல்காட் நிறுவன நிர்வாக இயக்குனராக உமாசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலாளராக ஏ.எம்.ராமன், குடிசைமாற்று வாரிய நிர்வாக இயக்குனராக விவேகானந்தன், பூம்புகார் கப்பல் கழக தலைவர்மற்றும் நிர்வாக இயக்குனராக தீபக் ஜெயின்,
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை சிறப்புச் செயலாளராக டி.ஜேக்கப், மின்ஆளுமை இயக்ககத்தின் தனி அலுவல் அதிகாரியாக அதுல் ஆனந்த்,
வருவாய் துறை கூடுதல் செயலாளராக தனம் ஜெயன், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை செயலாளராக ரமேஷ்குமார் கண்ணா ஆகியோர்நியமிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications