• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாங்குனேரியில் கலர் டிவி தொழிற்சாலை-தயாநிதி

By Staff
|

சென்னை:

தூத்துக்குடி நாங்குநேரி தொழிற்பேட்டையில் ரூ. 2,000க்கு கிடைக்கும் கலர் டிவிக்களைத் தயாரிக்கதொழிற்சாலை தொடங்கப்படும் என மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் கூறினார்.

சென்னை சிறுசேரி சிப்காட் தொழிற்பேட்டையை அவர் அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார். இதையடுத்துசெய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி,

இங்கு 71 நிறுவனங்கள் வரை செயல்பட வசதியும் கட்டுமானமும் தொழில்நுட்ப வசதியும் உள்ளது. ஆனால்,ஜெயலலிதாவின் ஆட்சியில் வெறும் 8 நிறுவனங்கள் தான் இங்கு வந்தன.

மிச்சமுள்ள 63 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான இடங்கள் காலியாக சும்மா கிடக்கின்றன. தமிழகத்தில்தொழில்துறையை இப்படித்தான் நடத்தியுள்ளார்கள். இங்கு 71 நிறுவனங்களும் செயல்பட்டிருந்தால் 3 லட்சம்பேருக்கு வேலை கிடைத்திருக்கும்.

விரைவில் இந்த 63 இடங்களுக்கும் நிறுவனங்களைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து சிறுசேரி வரை 26 கி.மீ. தூரத்துக்கு 6 வழிச் சாலை அமைக்கப்பட்டுவருகிறது. இந்தப் பணியை விரைவுபடுத்த தமிழ்நாட்டு சாலை மேம்பாட்டுத்துறை, நெடுஞ்சாலைத்துறைஅதிகாரிகளுடன் பேசியிருக்கிறேன். இந்த சாலையை மாமல்லபுரம் வரை நீட்டிக்குமாறு தமிழக அரசிடம்கோரியுள்ளேன்.

சென்னை தவிர மதுரை, கோவை, திருச்சி, நெல்லை ஆகிய நகர்களிலும் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கமுயற்சித்து வருகிறேன். இதற்காக கோவை விமான நிலையத்தை சர்வதேச அந்தஸ்துக்கு தரம் உயர்த்துமாறுமத்திய விமானப் போக்குவரத்துறை அமைச்சர் பிரபுல் படேலிடம் பேசியிருக்கிறேன். நிச்சயம் செய்து தருவதாகசொல்லியிருக்கிறார்.

அதே போல திருச்சி, மதுரை விமான நிலையங்களையும் நவீனப்படுத்துமாறு கோரியுள்ளேன். இதன்மூலம்தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைவதை வேகப்படுத்த முடியும்.

சென்னையில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் தொடங்கும். 2 வருடத்தில் இந்தப் பணிகள்முடிந்துவிடும்.

தூத்துக்குடி நாங்குனேரி தொழிற்பேட்டையில் கலர் டிவி தயாரிப்பு ஆலை தொடங்கலாம் என தமிழக அரசுக்குயோசனை கூறியிருக்கிறோம். பிக்சர் டியூபை இறக்குமதி செய்து, மற்ற பாகங்களை இங்கேயே தயாரித்தால் ரூ.2,000ல் கலர் டிவியை தயாரிக்க முடியும் என தொழில்நுட்ப ஆலோசகர்கள் கூறியுள்ளனர்.

திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லியபடி இலவச கலர் டிவி வழங்கவும் இது உதவும். இந்த தொழிற்சாலையால்10,000 பேருக்கு வேலையும் கிடைக்கும். தூத்துக்குடியும் நாங்கனேரியும் வளர்ச்சியடையும்.

சென்னைக்கு மெட்ரோ ரயிலே நல்லது. மோனோ ரயிலை சிட்னியில் பார்த்திருக்கிறேன். அது சுற்றுலாபயணிகளை கவரவே உதவியும். பயணிகள் போக்குவரத்து அவ்வளவாக உதவாது என்றார் தயாநிதி.

சென்னையில் தொழில் நுட்ப உயர் கல்வி மையம்:

இதற்கிடையே தகவல் தொழில் நுட்பம், வடிவமைத்தல் மற்றும் உற்பத்திக்கான (ஐடி, டிசைன் அண்ட்டெவலப்மெண்ட்) தேசிய அளவிலான உயர் தனிக் கல்வி மையத்தை சென்னையில் அமைத்திட முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

தமிழகம் மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்களின் தயாரிப்பில் முதன்மை மாநிலமாக உருவாகிவருகிறது. இந்த துறை நிலையாக அமைய வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் உயர் தகுதியும் பயிற்சியும் பெற்றமனித சக்திகள் அவசியம் தேவை.

இந்த தேவையை நிறைவு செய்வதற்கு மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை தகவல் தொழில் நுட்பம்,வடிவமைத்தல் மற்றும் உற்பத்திக்கான தேசிய அளவிலான உயர் தனிக் கல்வி மையத்தை சென்னையில்அமைத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இயந்திரவியல், மின்னியம், மின்னணுவியல் மற்றும் மென்பொருள் பொறியியல் அகிய அனைத்தும் பாடமுறைகளும் இந்த உயர் கல்வி மையத்தின் பாடத்தில் அடங்கி இருக்கும்.

இந்த கல்வி மையத்துக்குத் தேவையான 25 ஏக்கர் நிலம் தமிழக அரசால் கண்டறியப்பட்டு உள்ளது. அதைமத்திய அரசிடம் ஒப்படைக்க முதலமைச்ர் கருணாநிதி உத்தரவிட்டு உள்ளார்.

சென்னையில் அமைய உள்ள இந்த உயர் தனிக்கல்வி மையம் இந்தியாவில் அமையவிருக்கும் 2 மையங்களுள்ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

2003 ம் ஆண்டு முதல் மத்திய அரசிடம் நிலம் ஒப்படைக்கபபடாமலும், முடிவு எடுக்கப்படாமலும் இருந்ததால்,கட்டிடப் பணிகள் முடிந்து கல்வி மையம் தொடங்கப்படுவது தாமதப்பட்டு வந்ததைக் கருத்ததில் கொண்டு, இந்தபுதிய அரசு அமைந்ததும் முக்கியமான இந்த நேரத்தில் இப்போது முடிவு எடுத்து அறிவித்து உள்ளது.இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப பூங்கா: கருணாநிதி உறுதி

இந் நிலையில் முதல்வர் கருணாநிதியை சந்தித்த காங்கிரஸ் எம்எல்ஏ வசந்தகுமார் நாங்குனேரி தொழில்நுட்பப்பூங்காவை விரைவில் தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

விரைவில் இந்தத் திட்டம் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என கருணாநிதி உறுதியளித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X