தமிழகம் ஜில்-எங்கெங்கும் சூறாவளியுடன் மழை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்றுடன் கோடை மழைபெய்து வருவதால் மாநிலமே குளிர்ந்து போயுள்ளது.

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இந் நிலையில் கடந்த சிலநாட்களாக ஆங்காங்கே கோடை மழையும் பெய்து வந்தது. வியாழக்கிழமை இதில்பெரும் மாற்றம் ஏற்பட்டு தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த சூறாவளிக்காற்றுடன் நல்ல மழை பெய்தது.

தூத்துக்குடி, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த சூறாவளிக்காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. சென்னையிலும் பிற்பகலில் சுமார் அரை மணிநேரம் கன மழை பெய்தது.

இந்த திடீர் கோடை மழையால் வெயிலில் தகித்து வந்த தமிழகம் குளிர்ந்துபோயுள்ளது. இன்றும் சூறாவளிக் காற்றுடன் மழை பெய்யும் என வானிலைஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே, குற்றாலத்தில் சாரல் மழை தொடங்கியுள்ளது. கேரளாவில் இன்னும் 2நாட்களில் தென் மேற்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில் இப்போதேஅனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டத் தொடங்கியுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் வரத்து தொடங்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+