காதலனுடன் ஓடிய மனைவி-மன்னித்த கணவர்:நன்றி திருட்டுப் பயலே

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய மனைவியை, திருட்டுப் பயலே படத்தைப்பார்த்து அதில் வருவது போல மன்னித்து மீண்டும் ஏற்றுக் கொண்டுள்ளார் கணவர்.

இயக்குனர் சுசி. கணேசனின் திருட்டுப் பயலே படம் பிரிந்து போன ஒரு குடும்பத்தைசேர்த்து வைத்துள்ளது. அந்தப் படத்தில் மாளவிகா தனது கணவர் மனோஜ் கே.ஜெயனுக்குத் தெரியாமல் அப்பாஸை காதலிப்பார்.

இந்தக் கள்ளக் காதல் ஒரு கட்டத்தில் ஜெயனுக்குத் தெரிய வரும். அதிர்ச்சி அடையும்அவர் மனதை தேற்றிக் கொண்டு மனைவியை மன்னித்து விடுவார்.

இதேபோன்ற ஒரு நிகழ்ச்சி நிஜத்திலும் நடந்துள்ளது. அந்தக் கதை இதோ:

Malavika, Sonia and Jeeva in Tiruttu payale
தஞ்சை மாவட்டம் திருவையாறைச் சேர்ந்தவர் ரவி. சென்னையில் ஐந்துஆண்டுகளுக்கு முன்பு ஹோட்டல் நிடத்தி வந்தார். அந்த சமயத்தில் சித்ரா என்றபெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆண்குழந்தையும் பிறந்தது.

தொழிலில் திடீர் என நஷ்டம் ஏற்பட்டதால், ஹோட்டலை விற்று விட்டுகுடும்பத்தோடு திருவையாறு திரும்பினார் ரவி. வாழ்க்கையை ஓட்ட ஏதாவது வேலைபார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்த ரவி வெளிநாட்டுக்குப் போனால் அதிகம்சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில், குவைத் சென்றார்.

நல்ல வேலையில் அமர்ந்த ரவி நன்கு சம்பாதிததார். சேர்த்த பணத்தை எல்லாம்கொஞ்சம் கொஞ்சமாக மனைவிக்கு அனுப்பி வைத்தார்.

2 ஆண்டுகள் கழிந்த நிலையில் மனம் நிறைய ஆசைகளுடன், மனைவி,குழந்தையைப் பார்க்கப் போகும் ஆவலுடனும் ஊர் திரும்பியவருக்கு பெரும்அதிர்ச்சி காத்திருந்தது. அவரது மனைவி யாருடனோ ஓடிப் போய் விட்டதாக ஊரில்உள்ளவர்கள் கூறியதால் பெரும் அதிர்ச்சியில் மூழ்கினார் ரவி.

அதிர்ச்சியிலிருந்து மீண்ட அவர் மீண்டும் சென்னைக்கு வந்தார். வேலை தேடிஅலைந்தார். அப்போது தியாகராய நகரில் உள்ள ஒரு எஸ்டிடி பூத்தில் வேலைபார்த்துக் கொண்டிருந்த பெண்ணைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அந்தப் பெண் வேறு யாரும் அல்ல, ரவியின் மனைவிதான்.

என்ன நடந்தது, காதலித்தவனுடன் ஓடிப் போன நீ, இங்கே ஏன் வேலை பார்க்கிறாய்என்று அந்த வேதனையிலும் மனைவியிடம் பரிவாக விசாரித்தார் ரவி. அவரதுபரிவைப் பார்த்து வெட்கிப் போன சித்ரா, கதறி அழுதவாறு நடந்த கதையைக்கூறியுள்ளார்.

சித்ராவிடமிருந்த பணத்துக்காகத்தான் அந்த காதலன் அவரை கூட்டிக் கொண்டுபோயுள்ளான். பணம் எல்லாம் தீர்ந்ததும் சித்ராவை விட்டு விட்டு ஓடிப் போய்விட்டான்.

Jeeva with Malavika in Tiruttu payale
நிர்க்கதியாக விடப்பட்ட சித்ரா தனது தாய் வீட்டில் தஞ்சம் புகுந்தார். வயிற்றுப்பிழைப்புக்காக எஸ்.டி.டி. பூத்தில் வேலைக்கு சேர்ந்தார். இந்த நேரத்தில்தான் ரவியைமீண்டும் சந்திக்கும் நிலை அவருக்கு ஏற்பட்டது.

கதையைக் கேட்ட ரவி மனம் இறங்கினார். மீண்டும் சேர்ந்து வாழலாம் என்றுசித்ராவிடம் கூறினார். ஆனால் நான் உங்களுக்குத் துரோகம் செய்து விட்டேன்.உங்களுடன் சேர்ந்து வாழ மனம் இடம் கொடுக்கவில்லை என்று சித்ரா கூறினார்.

இருந்தாலும் விடாத ரவி, அவரது மனதை தேற்றினார். பின்னர் உற்றார், உறவினர்கள்,நண்பர்களுடன் கலந்து ஆலோசித்தார். அனைவரும் சித்ராவை மீண்டும் சேர்த்துக்கொள்ளாதே என்றுதான் கூறினார்கள்.

இந் நிலையில்தான் திருட்டுப் பயலே படத்தைப் பார்த்தார் ரவி. அதில் வரும்மாளவிகாவின் கதை தனது மனைவியின் வாழ்க்கைக் கதை போலவே இருப்பதைப்பார்த்த ரவி, சித்ராவையும் அழைத்துக் கொண்டு திருட்டுப் பயலே படத்தைக்காட்டினார்.

அதில் வரும் முடிவே எனது முடிவும் என்று சித்ராவிடம் கூறிய அவர் அத்தோடுநிற்காமல், மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்று மீண்டும்தாலி கட்டினார்.

இப்போது இருவரும் மீண்டும் இணைந்து வாழத் தொடங்கியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+