தமிழகத்தில் கேட்டவுடன் கரண்ட்!
உத்திரமேரூர்:
முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி முதல் விண்ணப்பித்த 24மணி நேரத்திற்குள் மின் இணைப்பு வழங்கும் திட்டம் அமலுக்கு வரும் என்றுமின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி அறிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள சாலவாக்கத்தில் புதிதாகஅமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையத்தைத் திறந்து வைத்து ஆற்காடு வீராசாமிபேசுகையில், தமிழகத்தில் மின்சாரம் கேட்டு விண்ணப்பித்த 24 மணி நேரத்திற்குள்வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டம் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ம்தேதி முதல் அமலுக்கு வருகிறது.விண்ணப்பம் அளித்த 24 மணி நேரத்திற்குள் மின் இணைப்பு வழங்கப்பட்டு விடும்.இதை செய்யத் தவறும் அதிகாரிகள் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுவர்.
சென்னையின் சில பகுதிகளில் மின்சாரத் தடை அவ்வப்போது ஏற்படுகிறது. மின்சாரஏற்றத் தாழ்வு இருப்பதால்தான் இந்த நிலை ஏற்படுகிறது.
இதை சமாளிக்க புதிய திட்டம் கொண்டு வரப்படவுள்ளது. அதன்படி துணை மின்நிலையத்தில் அதிக அளவு மின்சாரம் இருந்தால் மின் அழுத்தம் குறைவாக உள்ளதுணை மின் நிலையத்திற்கு அது மாற்றப்படும்.
விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 40,000 மின் இணைப்புகள் வழங்கப்படுகிறது.மதுராந்தகம் அருகே உள்ள செய்யூரில் 1000 மெகாவாட் மின்சாரத்தைத் தயாரிக்கமறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் திட்டமிட்டிருந்தார்.
அதற்கான முயற்சிகளையும் அவர் மேற்கொண்டிருந்தார். ஆனால் அவர் இறந்தவுடன்அந்தத் திட்டம் கைவிடப்பட்டு விட்டது. அதை நாங்கள் கொண்டு வருவோம் என்றார்வீராசாமி.












Click it and Unblock the Notifications