கன்னியாகுமரியில் கன மழை-மதுரையில் சூறாவளி பவானியில் வெள்ள அபாய எச்சரிக்கை!
சென்னை:
தென் மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளதன் எதிரொலியாக கன்னியாகுமரிமாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது.
கேரளாவிலும், கர்நாடகத்தின் தென்கோடிப் பகுதியிலும் தென் மேற்கு பருவ மழைதொடங்கியுள்ளது. இதன் எதிரொலியாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ளதமிழகப் பகுதிகளிலும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம், கோவை மாவட்டம் ஆகியவற்றில் கேரளாவை ஒட்டியுள்ளபகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இன்றுஅதிகாலையும் பலத்த மழை பெய்தது.
இதேபோல கோவையிலும் நல்ல மழை பெய்துள்ளது. இதன் காரணமாக பில்லூர்அணை வேகமாக நிரம்பி வருகிறது. இதைத் தொடர்ந்து பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது.
கேரளாவை ஒட்டியுள்ள சேர்வலாறு அணையில் ஒரே நாளில் 8 அடிக்கு அணையின்நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சிநிலையம் அறிவித்துள்ளது.
இதற்கிடையே மதுரையில் பலத்த சூறாவளிக் காற்று வீசியதால் நகரின் பலபகுதிகளிலும் மின் கம்பங்கள், மரங்கள் கீழே விழுந்தன. ஞாயிற்றுக்கிழமை காலைமுதல் மதுரையில் வெயில் அதிகம் இல்லை. வானம் மப்பும், மந்தாரமுமாக உள்ளது.
பிற்பகலுக்கு மேல் பலத்த சூறாவளிக் காற்று வீசியது.
காற்று படு வேகமாக சுழன்று சுழன்று அடித்ததால் பல இடங்களில் மரங்கள் வேரோடுவிழுந்தன. சில இடங்களில் மின்கம்பங்கள் கீழே விழுந்து மின் வினியோகம்துண்டிக்கப்பட்டது.
பலத்த சூறாவளி மற்றும் புழுதிக் காற்றினால், சாலைகளில் வாகனங்களில்சென்றவர்கள் பெரும் அவஸ்தைக்கு ஆளானார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications