கூட்டணி ஆட்சி: விரைவில் முடிவு-இளங்கோவன்
கும்பகோணம்:
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி குறித்து சோனியா காந்தியும், கருணாநிதியும் விரைவில் முடிவை அறிவிப்பார்கள்என மத்திய இணையமைச்சர் இளங்கோவன் கூறியுள்ளார்.
கும்பகோணத்தில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,தமிழகத்தில் அதிமுகவினர் வன்முறையில் ஈடுபடுகின்றனர். திமுகவினரை ஜெயலலிதா காட்டுமிராண்டிகள்என்றார். ஆனால், சட்டசபையில் முதல் நாளே அதிமுக ரகளையில் ஈடுபட்டது. இதிலிருந்து காட்டுமிராண்டிகள்யார் என்று தெரிகிறது.
ஜெயலலிதா சட்டசபைக்குச் சென்று தனது பேச்சால் வன்முறையை ஏற்படுத்த நினைத்தார். ஆனால், அதைமுதல்வர் கருணாநிதி தனது திறமையால் தவிர்த்துவிட்டார்.
வன்முறையில் ஈடுபடுவதால் இழந்த செல்வாக்கை அதிமுக பெற்றுவிட முடியாது.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி குறித்து சோனியா காந்தியும், கருணாநிதியும் விரைவில் முடிவை அறிவிப்பார்கள்.வாரியத் தலைவர் பதவிகளை காங்கிரசுக்குக் கொடுத்தால், நாங்கள் என்ன வேண்டாம் என்றா சொல்லப்போகிறோம்.
அதிமுகவுக்கு முட்டை தான்: வாசன்
இதற்கிடையே சேலம் மாவட்டம் ஆத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய மத்தியஅமைச்சர் வாசன்,
கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றும் அரசாக ஜனநாயகமுற்போக்குக் கூட்டணி ஆட்சி திகழும்.
சட்டசபையில் முதல் நாளே அதிமுவினர் ரகளை மற்றும் வன்முறையில்ஈடுபட்டுள்ளனர். இப்படியே அவர்கள் தொடர்ந்து நடந்து கொண்டால் வருகிறஉள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீதத் தோல்வியையே மக்கள் தருவார்கள்.
இதை உணர்ந்து அவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றார் வாசன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications