சட்டசபையின் கருப்பு நாளும், கற்பு நாளும்!
சென்னை:
நேற்றைய தினத்தை சட்டசபையின் கருப்பு நாள் என்று ஜெயலிலதா கூறியிருப்பதுஎழுத்துப் பிழையாகும். உண்மையில் அது கற்பு நாள் என்று முதல்வர் கருணாநிதிகூறியுள்ளார்.
சட்டசபையில் இன்று பல்வேறு சட்ட மசோதாக்கள், தீர்மானங்கள் கொண்டு வந்துநிறைவேற்றப்பட்டன. இதற்குப் பின்னர் முதல்வர் கருணாநிதி பேசுகையில்,தமிழ் மொழியை பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்கி சட்ட மசோதாநிறைவேற்றப்பட்டது மிக்க தமிழை நிலை நிறுத்தும் முயற்சியாகும்.
டெஸ்மா சட்டம், கட்டாய மதமாற்றத் தடுப்புச் சட்டம் ஆகியவை முழுமையாகநீக்கப்பட்ட இந்த நாள் சட்டசபையின் பொன்னான நாளாகும்.
உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடுவழங்குவதற்கு எதிராக முன்னேறிய மக்களின் தூண்டுதலின் பேரில் போராட்டம்நடந்து வருகிறது.
இந்த விஷயத்தில் மத்திய அரசு இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.
சட்டசபை வரலாற்றில் நேற்றைய நாள் கருப்பு நாள் என்று முன்னாள் முதல்வர்கூறியதாக பத்திரிக்கைகளில் செய்தி வந்துள்ளது. அது எழுத்துப் பிழையாகும்.
உண்மையில் சட்டசபை ஜனநாயகத்தில் நேற்றைய நாள் கற்பு நாளாகும் என்றார்கருணாநிதி.
மதமாற்றத் தடை சட்டம் ரத்தானது:
முன்னதாக கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம், டெஸ்மா, எஸ்மா சட்டங்களை ரத்துசெய்வதற்கான சட்ட மசோதாக்கள் சட்டசபையில் இன்று நிறைவேற்றப்பட்டன.
கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இந்த சட்டங்களை முழுமையாக ரத்துசெய்வதற்கான சட்ட மசோதாக்கள் சட்டசபையில் நேற்று முன் தினம் தாக்கலாயின.
இந்த மசோதாக்கள் மீது இன்று விவாதம் நடைபெற்றது.
காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாமக, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில்உறுப்பினர்கள் விவாதத்தில் கலந்து கொண்டு பேசினர்.
இதையடுத்து சட்டத்துறை அமைச்சர் திண்டுக்கல் ஐ.பெரியசாமி பதில் அளித்துப்பேசுகயிைல், கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை ரத்து செய்யும் சட்டம் கொண்டுவருவது மிகவும் அவசியமாகும். இந்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது என்தைஉறுதிப்படுத்தவே இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.
அப்போது முதல்வர் கருணாநிதி குறுக்கிட்டு, உச்சநீதிமன்றத் தீர்ப்பை சுட்டிக் காட்டிப்பேசிய முன்னாள் முதல்வரும், இந்நாள் எதிர்க்கட்சித் தலைவருமான ஜெயலலிதா,மாற்றுச் சட்டம் கொண்டு வராமலேயே பழைய சட்டம் காலாவதியாகி விடடது என்றுபேசினார்.
ஆனால் அவசரச சட்டத்தை ரத்து செய்து, புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் என்றுஅவர் எழுதி கையெழுத்திட்டுள்ள கோப்பு உள்ளது. எனவே புதிய சட்டம் கொண்டுவர வேண்டும், அவசியம் என்பதற்கு அதுவும் சாட்சியாக இருக்கிறது என்றார்.
இதையடுத்து குரல் ஓட்டு மூலம் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications