இடஒதுக்கீடு-ஆதரவாக சட்டசபையில் தீர்மானம்:மருத்துவர்களுக்கு அன்புமணி இறுதி எச்சரிக்கை
சென்னை:
மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்ய அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் இன்று தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பாக இன்று நிதியமைச்சர் அன்பழகன் ஒரு தனித் தீர்மானம் கொண்டுவந்தார்.அதில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில்பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு தொடர்ந்துசெயலாற்ற வேண்டும். இதற்காக அவசரச் சட்டத்தையும் உடனடியாக கொண்டு வரவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்தத் தீர்மானம் மீது பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பேசிய பின்னர்குரல் ஓட்டெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
டாக்டர்களுக்கு அன்புமணி எச்சரிக்கை:
இதற்கிடையே இட ஒதுக்கீட்டை எதிர்த்துப் போராட்டம் நடத்தும் டாக்டர்கள் இன்று மாலைக்குள் பணிக்குத்திரும்பாவிட்டால் அவர்களை அரசு பணி நீக்கம் செய்துவிட்டு மாற்று மருத்துவர்களை நிரந்தரமாக பணியில்அமர்த்துவோம் என மத்திய நலத்துறை அமைச்சர் அன்புமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியின் பல்வேறு மருத்துவமனைகளுக்கும் நேரில் சென்று நோயாளிகளின் நிலையை பார்வையிட்ட பின்நிருபர்களிடம் அன்புமணி பேசுகையில்,
இன்று பிற்பகலில் நோட்டீஸ் தருவோம். நாளை பணி நீக்க ஆணையை கொடுத்து விடுவோம். இந்த விஷயத்தில்எந்த நடவடிக்கையும் எடுத்து நோயாளிகளின் நலனைப் பேணுமாறு எனக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார். உச்சநீதிமன்றமும் வேலை நிறுத்தத்தை கைவிடுமாறு கூறியுள்ளது.
ஆனால், தொடர்ந்து போராட்டம் நடத்தினால் அதை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். புதிய டாக்டர்களைசேர்த்துவிட்டு இவர்களை வேலையை விட்டு தூக்குவோம். ஓய்வு பெற்ற மருத்துவர்களையும் பணியில்சேர்ப்போம். இனிமேலும் இவர்களுக்கு கெடு எல்லாம் விதித்துக் கொண்டிருக்க மாட்டோம்.
இன்று மாலைக்குள் வேலைக்குத் திரும்ப வேண்டும். இல்லாவிட்டால் நாளை பணி நீக்கம் தான் என்றார்.
இட ஒதுக்கீடுக்கு கருத்து ஆதரவு:
இந் நிலையில் பிற்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதற்கு முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி மற்றும் ப.சிதம்பரத்தின் மகன்கார்த்தி சிதம்பரம் ஆகியோர் இணைந்து நடத்தும் கருத்து அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இன்று இந்த அமைப்பின் கூட்டம்நடைபெறுகிறது.
உயர் கல்வி நிறுவனங்களில் பிற்பட்ட வகுப்பினருக்கு அடுத்த ஆண்டு முதல் 27 சதவீத இட ஒதுக்கீட்டை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால்இதற்கு முற்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.
தமிழகத்தில் இட ஒதுக்கீட்டுக்கு பெரிய அளவில் எதிர்ப்பு இல்லை. ஆனால் பரவலாக ஆதரவு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் கனிமொழி, கார்த்தி சிதம்பரம் நடத்தும் கருத்து அமைப்பு, இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இட ஒதுக்கீட்டின் அவசியம் என்ற தலைப்பில் சென்னையில் கருத்தரங்கம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கருத்து மற்றும் தமிழ் மையம் ஆகியவைஇணைந்து நடத்தும் இந்த கருத்தரங்கு மைலாப்பூர் சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள சாந்தோம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள மாண்ட்போர்ட் உள்விளையாட்டு அரங்கத்தில் மாலை ஐந்தரை மணிக்கு நடைபெறுகிறது.
இதில் விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன், காங்கிரஸ் எம்.எல்.ஏ. பீட்டர் அல்போன்ஸ், திட்டக் குழுத் துணைத் தலைவர்நாகநாதன், ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். கனிமொழி, கார்த்தியும் இதில் கலந்து கொண்டு கருத்து அமைப்பின் கருத்துக்களை எடுத்துவைக்கிறார்கள்.
இந்தக் கூட்டத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்து கொண்டவர்களும் கூட கலந்து கொண்டு தங்களது கருத்துக்களைப் பதிவு செய்யலாம் என கருத்துஅமைப்பு தெரிவித்துள்ளது.
சிபிஐ ஆர்ப்பாட்டம்:
இதற்கிடையே பிற்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டு முதலே அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்து தமிழகம்முழுவதும் ஜூன் 6ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உயர் கல்வி நிறுவனங்களில், கல்வியில் பிற்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்திட அவசரச் சட்டம் கொண்டு வரவேண்டும். இதை வலியுறுத்தி, இட ஒதுக்கீட்டிற்கான போராட்டக்குழு வரும் ஜூன் 6ம் தேதி தமிழகத்தின் நகரங்கள் அனைத்திலும் பேரணி,ஆர்ப்பாட்டம் உள்பட அனைத்துப் போராட்டங்களிலும் நடத்தவுள்ளோம் என்று கூறியுள்ளார்.உயர் நீதிமன்றம் தீர்ப்பு:
இந் நிலையில் இட ஒதுக்கீட்டை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் அகில இந்திய மருத்துவ கழக மாணவர்களுக்கும் மருத்துவர்களுக்கும்உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
போராட்டத்தை உடனே வாபஸ் பெற்று பணிக்குத் திரும்புமாறு அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications