அதிமுகவினர் கமிஷனே கண்ணாயினர்: ஸ்டாலின்
சென்னை:
அதிமுக ஆட்சியில் கமிஷன் பெறுவதிலேயே அமைச்சர்கள் அதிக அக்கறைகாட்டினர் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
சட்டசபையில் இன்று காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், மத்தியஅரசு நாடு முழுவதும் கிராமப் பகுதிகளில் உள்ள ஏழை, எளிய மக்களுக்குஆண்டுக்கு நூறு நாள் வேலை வாய்ப்பு உறுதி செய்யும் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை நிறைவேற்றி செயல்படுத்தி வருகிறது.நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தத் திட்டம் கடந்த தமிழக ஆட்சியில்,முறையாக செயல்படுத்தப்படவில்லை. 6 மாவட்டத்தில் இந்தத் திட்டத்தைசெயல்படுத்த ரூ. 66 கோடியை மத்திய அரசு கடந்த ஆண்டு வழங்கியது.
ஆனால் இதில் வெறும் 3 கோடி ரூபாயை மட்டுமே அதிமுக அரசு பயன்படுத்தியது.
பல லட்சக்கணக்கான ஏழை, எளிய கிராம மக்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெறமனு செய்தும் அவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்காமல் கடந்த அரசு மிகப் பெரியஅநீதியை இழைத்துள்ளது.
தற்போது ஊரக வளர்ச்சித் துறையை கையில் வைத்திருக்கும் அமைச்சர் ஸ்டாலின்இதில் தனி கவனம் செலுத்தி அதிக ஏழை, எளிய மக்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தியாவிலேயேம முன்மாதிரியாக இந்தத் திட்டததை இங்கு செயல்படுத்தவேண்டும் என்றார்.
இதற்குப் பதில் அளித்த அமைச்சர் ஸ்டாலின், பீட்டர் அல்போன்ஸ் பேசியது நூற்றுக்குநூறு உண்மை. இதுபோல பல திட்டங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி அளித்துள்ளது.ஆனால் அவற்றை கடந்த அரசு முறையாக செயல்படுத்தவில்லை.
குறிப்பாக ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தில் விழுப்புரம், கடலூர், நாகை,திருவண்ணாமலை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்கள்தேர்ந்தெடுக்கப்பட்டு இதற்காக மத்திய அரசு ரூ. 61 கோடியே 76 லட்சம் ரூபாயைஒதுக்கியது.
இதில் 31.3.2006 வரை ரூ. 3 கோடி மட்டுமே அதிமுக அரசால்செலவிடப்பட்டுள்ளது. இதைப் பார்க்கும்போது இத்திட்டத்தில் அவர்கள் தனி கவனம்எடுத்து நிறைவேற்றவில்லை என்பது தெரிகிறது.
எந்த திட்டத்தை நிறைவேற்றினால் கூடுதல் கமிஷன் பெற முடியும் என்றஅக்கறையிலேயே அவர்கள் செயல்பட்டு உள்ளனர். இதில் கமிஷன் அடிக்க முடியாதுஎன்பதால் திட்டத்தை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை.
முதல்வரின் வழிகாட்டுதலின் பேரில் இந்தத் திட்டத்தை முனைப்போடு செயல்படுத்தஇந்த அரசு பாடுபடும் என்றார் ஸ்டாலின்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications