வைகோவால் தயாநிதி உயிருக்கு ஆபத்து: பிரதமரிடம் திமுக எம்.பிக்கள் புகார்!
டெல்லி:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவால், மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கும்,அவரது குடும்பத்தினருக்கும் ஆபத்து உள்ளதால் அவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு தரவேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் திமுக எம்.பிக்கள் கோரிக்கை மனுகொடுத்துள்ளனர்.
செ.குப்புசாமி தலைமையில் திமுக எம்.பிக்கள் குழு இன்று பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து மனு ஒன்றைக் கொடுத்தனர்.அதில், கடந்த 1993ம் ஆண்டு திமுகவிலிருந்து வைகோ வெளியேற்றப்பட்ட பின்னர்,வைகோவினால் கருணாநிதியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக அப்போதுமத்திய உளவுத்துறை தகவல் அனுப்பியது.
இதையடுத்து அப்போதைய அதிமுக அரசு கருணாநதிக்கு கூடுதல் பாதுகாப்புஅளித்தது. கடந்த அதிமக ஆட்சியில் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தகாரணத்தால் வைகோவை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, பொடா சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்தார்.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின்போது தயாநிதிமாறனையும், அவரது குடும்பத்தினரையும் வைகோ கடுமையாக விமர்சித்தார். மேலும்அவருக்கும், தீவிரவாத அமைப்புக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
எனவே இந்தச் சூழ்நிலையில் தயாநிதி மாறனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும்வைகோவினால் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே தயாநிதிக்கும் அவரதுகுடும்பத்தினருக்கும் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு திமுக எம்.பிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications