லத்திகா சரணின் அதிகாரம் குறைப்பு:ஜாங்கிட் வசம் சட்டம்-ஒழுங்கு பொறுப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரண் வசம் இருந்து வந்த மிகமுக்கியமான சட்டம் ஒழுங்கு பிரிவு அவரிடமிருந்து பறிக்கப்பட்டு கூடுதல்ஆணையர் ஜாங்கிட்டிடம் வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் லத்திகா சரணின் அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளதாக காவல்துறைவட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

சென்னை மாநகர காவல்துறையின் தலைவராக இருப்பவர் ஆணையர். அவருக்குஅடுத்த இடத்தில் இருப்பவர் கூடுதல் ஆணையர்.

ஆணையர் பொறுப்புக்கு இணையாக கருதப்படும் கூடுதல் ஆணையர் பதவியை,ஆணையர் பொறுப்பில் இருப்பவர்கள் பெரும் எரிச்சலாக கருதுகிறார்கள்.

தொடர்பான செய்திகள்பு ஆணையராக இருந்த நடராஜ், கூடுதல் ஆணையராக இருந்து வந்தராஜேந்திரனை கண்டுகொள்ளாமல் டம்மியான சில விவகாரங்களை மட்டுமேகையாள அனுமதித்து வந்தார்.

தேர்தல் ஆணையத்தால் நடராஜ் மாற்றப்பட்ட பின்னர் லத்திகா சரண் புதியஆணையராக நியமிக்கப்பட்டார். அப்போதும் ராஜேந்திரனே கூடுதல் ஆணையராகஇருந்து வந்தார்.

இந் நிலையில் திமுக ஆட்சிக்கு வந்ததும் கூடுதல் ஆணையராக இருந்து வந்தராஜேந்திரன் மாற்றப்பட்டு ஜாங்கிட் நியமிக்கப்பட்டார். அவர் இப்பதவிக்குநியமிக்கப்பட்டதுமே காவல்துறையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

மிகவும் திறமையான, சுறுசுறுப்பான அதிகாரியான ஜாங்கிட் கூடுதல் ஆணையராகநியமிக்கப்பட்டது ஏன்? அவரது நியமனத்தால் ஆணையர் லத்திகா சரண் டம்மிஆக்கப்படப் போகிறாரா என்று காவல்துறையினர் மத்தியில் பேச்சு கிளம்பியது.

இப்போது அது உண்மையாகியுள்ளது. லத்திகா சரண் டம்மி ஆக்கப்பட்டுள்ளார்.எப்போதுமே ஆணையரின் கையில் இருக்கும் மிக மிக முக்கியமான சட்டம் ஒழுங்குவிவகாரம் தற்போது அவரிடமிருந்து பறிக்கப்பட்டு ஜாங்கிட்டிடம்கொடுக்கப்பட்டுள்ளதாம்.

இதன் மூலம் ஆணையர் லத்திகா சரணின் அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளதாககருதப்படுகிறது.

சட்டம் ஒழுங்குதான் மிக மிக முக்கியமான இலாகா. அது தற்போது ஜாங்கிட்டிடம்போய் விட்டதால் சென்னை மாநகர காவல்துறைக்கு உட்பட்ட இணை ஆணையர்கள்,துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் அனைவருமே நேரடியாகஜாங்கிட்டையே தொடர்பு கொள்ள வேண்டும், ஆணையரை அவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

சட்டம் ஒழுங்கு விவகாரத்தை பார்த்துக் கொள்ளுமாறு லத்திகா சரணே, ஜாங்கிட்டைகேட்டுக் கொண்டதாகவும் ஒரு பிரிவு காவலர்கள் மத்தியில் பேச்சு உள்ளது.

இருப்பினும், மேலிட உத்தரவுப்படியே அவர் இவ்வாறு நடந்து கொண்டதாகஇன்னொரு தரப்பு கூறுகிறது. இப்படிச் செய்துள்ளதன் மூலம் சென்னை மாநகரவரலாற்றிலேயே ஆணையரிடமிருந்த மிக முக்கியமான அதிகாரம் அவருக்குக் கீழ்உள்ளவரிடம் போயுள்ளதாக காவல் வட்டாரங்களில் முனுமுனுப்பு கிளம்பியுள்ளது.

இது காவல்துறைக்கு நல்லதல்ல என்றும் சிலர் கவலை தெரிவிக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+