சென்னை-பெங்களூர், நாகர்கோவில் சிறப்பு ரயில்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் இருந்து பெங்களூருக்கும் நாகர்கோவிலுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை எழும்பூரிலிருந்து 2ம் தேதி, 4,5,6,7, மற்றும் 9ம் தேதிகளில் நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் (எண்0611) இயக்கப்படும். இந்த ரயில் எழும்பூரிலிருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 2மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.நாகர்கோவிலிலிருந்து 3,5,6,7, மற்றும் 8ம் தேதிகளில் சென்னைக்கு சிறப்பு ரயில் (எண் 0612) இயக்கப்படும்.இந்த ரயில் இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
அதே போல சென்னை சென்ட்ரலிலிருந்து நாளை (3ம் தேதி) பெங்களூருக்கு சிறப்பு ரயில் (எண் 0681)இயக்கப்படும். இந்த ரயில் இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5.15 மணிக்கு சென்னைவந்தடையும்.
இவ்வாறு ரயில்வே துறை அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications