நாங்குநேரியில் இலவச கலர் டிவி தயாரிப்பு தொழிற்சாலை: கருணாநிதி
டெல்லி:
நாங்குநேரியில் அமையவுள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் கலர் டிவிதயாரிப்புத் தொழிற்சாலை அமைக்கப்படும். திமுக அரசு வழங்கவுள்ள இலவச கலர்டிவி இங்குதான் தயாரிக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
டெல்லி சென்றுள்ள கருணாநிதி இன்று காலை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை சந்தித்தார். இரு தலைவர்களும் சுமார் முக்கால் மணி நேரம் பேசினர்.சந்திப்பின்போது மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும் கூடவே இருந்தார்.சந்திப்புக்குப் பின்னர் வெளியே வந்த கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில்,ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி பெயரில் விமான பயிற்சி மையம்அமைக்கப்படவுள்ளது. காங்கிரஸாரின் கோரிக்கையை ஏற்று இதுஅமைக்கப்படுகிறது. இதன் அடிக்கல் நாட்டு விழாவுக்கு வர வேண்டும் எனசோனியாவை அழைத்தேன். அவரும் வருவதாக சம்மதித்துள்ளார். விரைவில் தேதிஅறிவிக்கப்படும்.
சோனியா காந்தியுடன் தமிழக வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் ஆலோசித்தேன். திமுகஅமைச்சரவையில், காங்கிரஸ் கட்சி பங்கேற்பது குறித்து சோனியாவிடம் எதையும்விவாதிக்கவில்லை.
நாங்குனேரியில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்படுவதற்கான பணிகள்ஏற்கனவே தொடங்கி விட்டன. அங்கு கலர் டிவி தயாரிப்புத் தொழிற்சாலைதொடங்கப்படும். எங்களது அரசு வழங்கவுள்ள இலவச கலர் டிவியும் அங்குதான்தயாரிக்கப்படும்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில், மதிமுக தற்போது இல்லை. எனவே அதுகுறித்துநான் சோனியாவுடன் பேசவில்லை என்றார் கருணாநிதி.
இன்று மாலை பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமையும் கருணாநிதி சந்தித்துப் பேசவுள்ளார்.
முன்னதாக முதல்வர் பதவியை ஏற்ற பின் முதல் முறையாக டெல்லி சென்றகருணாநிதியை விமான நிலையத்தில் திமுக மத்திய அமைச்சர்கள், எம்.பிக்கள்வரவேற்றனர். டெல்லி வாழ் திமுக தொண்டர்கள், தாரை தப்பட்டை முழங்கஅவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில், தமிழக அரசுஅறிவித்துள்ள புதிய திட்டங்களுக்கு மத்திய அரசின் அனுமதியைக் கேட்போம்.அந்த்த திட்டங்களை நிறைவேற்ற பணமும் கேட்போம் என்றார்.
பின்னர் பழைய தமிழ்நாடு இல்லத்திற்குச் சென்று கருணாநிதி தங்கினார். ஜெயலலிதாஆட்சியில் பல கோடியில் கட்டப்பட்ட அதி நவீன புதிய தமிழ்நாடு இல்லத்துக்குகருணாநிதி செல்லவில்லை.
நாளை திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவுடன்ஆலோசனை நடத்தும் கருணாநிதி, தமிழக திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்குமாறுகோரவுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications