காய்தே மில்லத் பிறந்தநாள்- ஜெ, ஸ்டாலின், விஜய்காந்த் அஞ்சலி
சென்னை:
மறைந்த முஸ்லீம் லீக் தலைவர் காயிதே மில்லத்தின் 111வது பிறந்த நாளையொட்டிசென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டதலைவர்கள் மலர் போர்வை போர்த்தி அஞ்சலி செலுத்தினர்.
காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப்பின் 111 வது பிறந்த நாள் இன்றுகொண்டாடப்பட்டது. இதையொட்டி திருவல்லிக்கேணி பெரிய மசூதி வளாகத்தில்உள்ள காயிதே மில்லத்தின் நினைவிடத்தில் இன்று காலை ஜெயலலிதா மலர்ப்போர்வை போர்த்தி அஞ்சலி செலுத்தினார்.ஜெயலலிதாவுடன் முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செலவம், ஜெயக்குமார் மற்றும்திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், விசாலாட்சி நெடுஞ்செழியன்,வசனகர்த்தா லியாகத் அலிகான் உள்ளிட்ட அதிமுகவினரும் உடன் சென்றனர்.
தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் ஸ்டாலின், பரிதி இளம்வழுதி, மொய்தீன் கான்,எஸ்.எம். உபையதுல்லா ஆகியோர் மலர்ப் போர்வை போர்த்தினர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனும்நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
காங்கிரஸ் சார்பில் தலைவர் கிருஷ்ணசாமி, துணை மேயர் கராத்தே தியாகராஜன்,எம்.பி. ஜே.எம். ஆரூண், முனவர் பாட்சா உள்ளிடடோரும், பாமக சார்பில்ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோரும்,
விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் தொல். திருமாவளவன், செல்வம், ரவிக்குமார்,இந்திய யூனியன் முஸ்லீம லீக் சார்பில் காதர் மொஹைதீன், தாவூத் மியாகான்(காயிதே மில்லத்தின் பேரன்) உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications