முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் திடீர் கைது
வேலூர்:
அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக முன்னாள் அதிமுக அமைச்சர்பாண்டுரங்கன் உள்ளிட்ட 45 பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.
பாண்டுரங்கன் எம்.எல்.ஏவாக உள்ள வேலூர் அருகே உள்ள அணைக்கட்டுதொகுதிக்குட்பட்ட ஒரு ஆரம்ப சுகாதார மையத்தின் சுற்றுச் சுவரில் ஜெயலலிதாவின்படம் வரையப்பட்டிருந்தது.இந்த படத்தை ஆரம்ப சுகாதார மையத்தின் ஊழியர்கள் இன்று காலை அழித்தனர்.
அப்போது அங்கு தனது ஆதரவாளர்களுடன் வந்த பாண்டுரங்கன், ஜெயலலிதாவின்படத்தை அழிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்களைத் தடுத்தார்.
முன்னாள் முதல்வரின் படம் அரசு கட்டடத்தின் சுவரில் இருக்கக் கூடாதுஎன்பதால்தான் அதை அழிப்பதாக ஊழியர்களும், அதிகாரிகளும் பாண்டுரங்கனிடம்கூறினர். ஆனால் பாண்டுரங்கன் அதை ஏற்கவில்லை.
ஜெயலலிதாவின் படத்தை அழிக்க விடாமல் ஊழியர்களை அவரும்,அதிமுகவினரும் தடுத்தனர். இதையடுத்து ஆரம்ப சுகாதார மைய அதிகாரிகள்போலீஸில் புகார் கொடுத்தனர்.
இதன் பேரில் போலீஸார் பாண்டுரங்கனையும், அவருடன் இருந்த 45 பேரையும்கைது செய்தனர்.
சட்டசபையில் காவல்துறை அதிகாரிகளுடன் மோதிய பாண்டுரங்கன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றதுநினைவுகூறத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications