கட்டி உருண்ட காக்கிகள்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டரும், தலைமைக் காவலரும்கட்டிப்புரண்டு சண்டை போட்டதால் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்புஏற்பட்டது.
நீலாங்கரை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தங்கத்துரை சமீபத்தில் வேறு காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டார். புதிய இன்ஸ்பெக்டராக நீதிராஜன் என்பவர்நியமிக்கப்பட்டார். மாற்றம் செய்யப்பட்டபோதிலும், தங்கத்துரை தனது பொறுப்பைஒப்படைக்காமல் இருந்து வந்தார்.மேலும், தலைமைக் காவலர் ஆறுமுகம்தான் தனது இடமாறுதலுக்குக் காரணம் எனசந்தேகமடைந்த தங்கத்துரை, ஆறுமுகம் பணியில் இருந்தபோதிலும், அவர்வேலைக்கே வரவில்லை என்று ஆப்சென்ட் போட்டு வந்துள்ளார்.
இதுகுறித்து தங்கத்துரையிடம் ஆறுமுகம் கேட்டுள்ளார். இதுதொடர்பாகஇருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அது கைகலப்பு வரை போய்காவல் நிலையத்திலேயே இருவரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டுள்ளனர்.
மற்ற காவலர்கள் இருவரையும் விலக்கி விட்டுள்ளனர்.
இந்த சண்டையால் காவல்துறையில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம்தொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications