பெட்ரோல் விலை உயர்வு: ஜெ கடும் கண்டனம்
சென்னை:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும்என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,பெட்ரோல் விலையை 4 ரூபாயும், டீசல் விலையை 2 ரூபாயும் மத்திய அரசுஉயர்த்தியுள்ளது. திமுக அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கூட்டணி அரசு 6வது முறையாகபெட்ரோல், டீசல் விலையை அநியாயமாக உயர்த்தியுள்ளது.
கடந்த 24 மாதங்களில் 6 முறை ஏற்றியிருப்பது இதுவரை எந்த அரசும் செய்திராதசாதனை, மக்களுக்குக் கிடைத்திருப்பது மாபெரும் வேதனை.
வாகனங்களுக்கான எரிபொருளின் விலை உயர்வு மட்டும் அல்ல இது. மாறாகஅத்தியாவசியப் பொருட்களுக்கும் விலை ஏற்றணாகும். வாழ்க்கைத் தரத்தைஉயர்த்துவார்கள் என்றுதானே மக்கள் இவர்களுக்கு வாக்களித்தார்கள்.
இப்படி அத்தியாவசிப் பொருட்களின் விலை உயர்வுக்குக் காரணமாக அமையும்வகையில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவா மக்கள் இவர்களுக்குவாக்களித்தார்கள்?
மக்களுக்குத் துரோகம் செய்யும் அரசாக காங்கிரஸ், திமுக கூட்டணி அரசு இருப்பதுவேதனைக்குரியது. சாமானிய மக்கள், விவசாயிகள், வியாபாரிகள் மட்டுமின்றி,தரைவழிப் போக்குவரத்தை மேற்கொள்ளும் அனைவருக்கும் இந்த விலை உயர்வுசொல்ல முடியாத துயரத்தை அளித்துள்ளது.
மக்கள் மீது மேலும் மேலும் சுமையை ஏற்றி மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது.இந்த விலை உயர்வுக்கு திமுக உள்ளிட்ட மத்திய கூட்டணியில் உள்ள அனைத்துக்கட்சிகளுமே உடந்தை.
இதில் வேடிக்கை என்னவென்றால், விலை உயர்வுக்கு ஒப்புதல் அளித்த கட்சிகள்அனைத்தும், இப்போது அதைக் கண்டிப்பதாக வெளியில் அறிக்கை விடுகின்றன.ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் அறிவிக்கின்றன. இந்த கபட நாடகத்தை மக்கள்அறியாமல் இல்லை.
ஐந்து மாநிலத் தேர்தல் நேரத்தில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினால் அதனால்தேர்தல் முடிவுகளில் பாதிப்பு ஏற்படும் என்பதால்தான் இப்போது தேர்தல் முடிந்தபின்னர் மக்கள் மீது பாய்ந்திருக்கிறது மத்திய அரசு.
மக்கள் இந்த வஞ்சகச் செயலை புரிந்து கொள்ள வேண்டும்.
கடந்த ஐந்து முறையும் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியபோதும்,எனது அரசு பஸ் கட்டணத்தை அனுவளவும் உயர்த்தவில்லை.
முதல்வர் கருணாநிதி மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்றுநினைத்தால், அதற்கு இது நல்ல தருணம். தமிழக அரசு பெட்ரோல், டீசலுக்குவிதிக்கும் விற்பனை வரியைக் குறைக்க அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த யோசனையை ஏற்கனவே அவர் எனது அரசுக்கு கூறியதுதான். அதை இப்போதுஅவருக்கு நினைவூட்டுகிறேன்.
கடும் கண்டனத்துக்குரிய பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசுஉடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications