கார் விபத்தில் சிக்கிய வெங்கையா நாயுடு
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி செல்லும் வழியில் பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கார் விபத்தில் சிக்கினார். ஆனால்,அதிர்ஷடவசமாக காயமின்றி தப்பினார்.
பாண்டிச்சேரி உள்ளாட்சி தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி போட்டியிடுவது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில்பங்கேற்க சென்னையில் இருந்து காரில் பாண்டிச்சேரி சென்றார்.காலாப்பட்டு அருகே ஒரு வாலிபர் குறுக்கே ஓடி ரோட்டை கடக்க முயன்றார். அப்போது கார் டிரைவர் திடீர்என்று பிரேக் போட்டார். இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கமிங்கும் ஓடி, வாலிபர் மீது மோதி நின்றது.
அப்போது வெங்கையா நாயுடுவின் காருக்கு பின்னால் பாதுகாப்புக்கு வந்த போலீஸ் ஜீப் நாயுடுவின் காரின்பின்புறம் மோதியது. இதில் காரின் கண்ணாடிகள் நொறுங்கின. காருக்குள் இருந்த வெங்கையா நாயுடுஅதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.
பின்னர் அடிபட்ட வாலிபரை தனது காரிலேயே தூக்கி போட்டுக்கொண்டு காலாப்பட்டு பிம்ஸ்மருத்துவமனையில் அனுமதித்தார் நாயுடு. பின்பே பாண்டிச்சேரி கூட்டத்துக்குச் சென்றார்.
அடிபட்ட வாலிபரின் பெயர் ரவி இவர் செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தை அடுத்த தையப்பாக்கத்தைசேர்ந்தவர். இவருக்கு வலது கால் எலும்பு முறிந்து விட்டது.












Click it and Unblock the Notifications