செட் டாப் பாக்ஸுக்கு கால்பந்து ரசிகர்கள் எதிர்ப்பு!
சென்னை:
உலகக் கால்பந்து போட்டிகளை ரசிப்பதற்கு வசதியாக சென்னையில் செட் டாப்பாக்ஸ் முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சென்னையில்இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்தியாவிலேயே சென்னையில் மட்டும்தான் செட் டாப் பாக்ஸ் முறை அமலில்உள்ளது. இதனால் பல முக்கிய தொலைக்காட்சிகளை பார்க்க முடியதாத நிலைஉள்ளது.இந்த நிலையில் உலகக் கோப்பைக் கால்பந்து போட்டி இன்னும் 2 தினங்களில்தொடருகிறது. இப்போட்டிகளை காண உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் பெரும்ஆவலுடன் உள்ளனர்.
ஆனால் சென்னையில் இப்போட்டிகளைக் காண முடியாது.
செட் டாப் பாக்ஸ் முறை அமலில் உள்ளதால் உலகக் கோப்பைக் கால்பந்துபோட்டிகளைக் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதைக் கண்டித்து இந்தியஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இன்று சென்னை அமைந்தகரைபகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னையில் செட் டாப் பாக்ஸ் முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.அனைத்துக் கால்பந்துப் போட்டிகளையும் ரசிகர்கள் பார்க்க வகை செய்ய வேண்டும்என்று அவர்கள் கோரினர்.












Click it and Unblock the Notifications