கலக்கும் கேப்டன்: கலங்கும் கட்சிகள்!
சென்னை:
திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் அக்கட்சிகளிலிருந்து விலகி விஜயகாந்த்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தில்இணைந்து வருவதால், அக்கட்சிகளுக்கு கலக்கம் ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் அனைவரும் எதிர்பார்த்தது போல அதிக இடங்களில்விஜயகாந்த் கட்சி ஜெயிக்காவிட்டாலும் கூட சிறுபான்மை ஆட்சி ஏற்பட வழி வகுத்துவிட்டார் விஜயகாந்த்.தமிழகத்தில் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக மாறப் போகும் அறிகுறிகளைதேமுதிக வெளிக்காட்டத் தொடங்கியுள்ளது.
இந் நிலையில் திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ், மதிமுக ஆகிய கட்சிகளைச் சேர்ந்தபல முக்கியப் பிரமுகர்கள் தொடர்ந்து தேமுதிகவில் சேர்ந்து வருகின்றனர்.
அதிமுகவைச் சேர்ந்தவர்கள்தான் அதிக அளவில் விஜயகாந்த் கட்சியை நாடிவருகின்றனர். அதற்கு அடுத்து மதிமுகவிலிருந்தும், பாமகவிலிருந்தும் கட்சி மாறிவருகின்றனர். ஆளும் கட்சியாக இருப்பதாலோ என்னவோ, சம்பாத்தியத்தை ஏன்விட்டுவிட்டுப் போக வேண்டும் என்று கருதி திமுகவிலிருந்து விலகி வருவோர்கொஞ்சம் குறைவாகவே உள்ளனர்.
இதனால் விஜயகாந்த் உற்சாகம் அடைந்துள்ளார். பிற கட்சிகளிலிருந்து சேரவிரும்புபவர்களிடம் ஆரம்பத்தில் அவர் காட்டிய கெடுபிடிகளை தற்போது குறைத்துக்கொண்டு விட்டதாக தெரிகிறது.
தினசரி நூற்றுக்கணக்கான மாற்றுக் கட்சியினர் சென்னை கோயம்பேட்டில் உள்ளவிஜயகாந்த்தின் கல்யாண மண்டபத்தில் தேமுதிகவில் சேருவதற்காக வரிசை கட்டிநின்று கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாற்றுக்கட்சியினர் தேமுதிகவில் சேரும் நிகழ்ச்சியில் விஜயகாந்த் பேசுகையில்,
பதவி ஆசையை மனதில் கொண்டு இங்கு யாரும் வரக் கூடாது. மக்களுக்காகஉழைப்பவர்களுக்குத்தான் எங்களது கட்சியில் முக்கியத்துவம், மரியாதைவழங்கப்படும். ஆதாயம் பெறுவதற்காகவும், சுய விளம்பரத்திற்காகவும் இங்குவருகிறவர்களுக்கு கட்சியில் இடம் கிடையாது.
சட்டசபைத் தேர்தலில் நாம் கூட்டணி வைப்போம் என்றார்கள். ஆனால் தனித்துத்தான்நின்றோம். 28 லட்சம் ஓட்டுக்களை வாங்கி மற்ற கட்சிகளுக்கு அதிர்ச்சி அளித்தோம்.
ஒவ்வொரு தொகுதியிலும் நமது வேட்பாளர்கள் முக்கிய வேட்பாளர்களுக்கு கடும்போட்டியைக் கொடுத்தனர். கணிசமான வாக்குகளை கொடுத்து மக்கள் நம்மைஅங்கீகரித்திருக்கிறார்கள்.
இனி வரும் தேர்தல்களில் முக்கிய இடம் வகிக்கும் அளவுக்கு நமது கட்சிவளர்ந்துள்ளது. தினசர ஆயிரக்கணக்கான பிற கட்சியினர் இங்கு வருதைப்பார்க்கும்போது கட்சி மீது மக்கள் வைத்துள்ள ஆழமான நம்பிக்கையை உணரமுடிகிறது.
இனி தமிழகத்தில் நடக்கும் தேர்தல்களில் தேமுதிக முக்கிய அங்கம் வகிக்கும் நிலைவர வேண்டும். அந்த அளவுக்கு உயர கட்சியை பலப்படுத்த வேண்டியது அவசியம்.விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ளது. இதிலும் கூட்டணி அமைக்கும் எண்ணம்இல்லை. தனித்து போட்டியிடவே விரும்புகிறோம்.
இதற்கு உங்களது ஒத்துழைப்பு முழுமையாக இருக்க வேண்டும். அப்போதுதான்வெற்றி இலக்கை எளிதில் எட்ட முடியும்.
எல்லாத் தொகுதிகளுக்கும் நான் வந்தால்தான் என்ற நிலை இருக்கக் கூடாது.அனைவரும் சும்மா இருக்காமல் உழைக்க வேண்டும் என்றார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications