இலங்கை: கண்ணிவெடித் தாக்குதலில் 5 பேர் பலி
கொழும்பு:
இலங்கையில் கண்ணிவெடி வெடித்து 5 அப்பாவி தமிழர்கள் பலியாயினர். இதற்குராணுவமே காரணம் என விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் டிராக்டரில் சென்று கொண்டிருந்த சிலர் கண்ணிவெடியில் சிக்கிக் கொண்டனர். இதில் 5 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். 14 பேர்படுகாயம் அடைந்தனர்.இந்த சம்பவத்திற்கு விடுதலைப் புலிகளே காரணம் என ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் இதை புலிகள் இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் தயாமாஸ்டர் மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், வாகனத்தைத் தகர்க்கும் நிலவெடியில் சிக்கி அந்தடிராக்டரில் சென்றவர்களில் 5 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவத்திற்குக் காரணம்இலங்கை ராணுவம்தான்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஆயுதம் தாங்கிய வன்முறைக் கும்பலின் (கருணாபிரிவு) துணையோடு இந்த பாதகத்தை இலங்கை அரசு நிகழ்த்தியுள்ளது. இதற்கும்எமது இயக்கத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை.
ஆனால் ராணுவம் தனது கொடுஞ்செயலை ஒப்புக் கொள்ளாமல் தொடர்ந்து மறுத்தவருகிறது என்றார். இலங்கை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் பிரசாத்சமரசிங்கே இதை மறுத்துள்ளார்.
அந்தப் பகுதிக்கு நாங்கள் போவதே கிடையாது. இதற்கும், எங்களுக்கும் சம்பந்தம்இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே நார்வே தலைநகர்ஓஸ்லோவில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
அதற்கிடையே நிலவெடியில் சிக்கி 5 பேர் இறந்திருப்பது பரபரப்பைஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, வட கிழக்கு மாகாணத்திற்கான விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் எழிலன், உறுதியான வெற்றியைப் பெற உரியஉத்தரவை எங்களது தேசியத் தலைவரிடமிருந்து எதிர்நோக்கியுள்ளோம் என்றுகூறியுள்ளார்.
இதனால் விடுதலைப் புலிகள் பெரும் போருக்கும் தயாராகவே இருப்பதாககூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications