சென்னை விமான நிலையம் தனியார் வசமாகிறது?மதுரை-கோவை விமான நிலையங்கள் தரம் உயர்வு
டெல்லி:
டெல்லி, மும்பையைத் தொடர்ந்து கொல்கத்தா மற்றும் சென்னை விமானநிலையங்களின் பராமரிப்பையும் தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசுமுடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.
இதுதொடர்பாக இன்னும் 3 மாதங்களில் இறுதி முடிவு எடுக்கப்படும் என மத்தியசிவில் விமானத்துறை இணையமைச்சர் பிரபுல் படேல் கூறியுள்ளார்.டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்களின் பராமரிப்பு சமீபத்தில் தனியார்மயமாக்கப்பட்டது. இதற்கு விமான நிலைய ஊழியர்களிடையே கடும் எதிர்ப்புகிளம்பியது. விமான நிலைய ஊழியர்கள் நாடு முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்ததால், விமான போக்குவரத்தும் கடுமையாகபாதிக்கப்பட்டது.
இந் நிலையில் சென்னை மற்றும் கொல்கத்தா விமான நிலையங்களின் பராமிப்பையும்தனியாரிடமே ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இதுதொடர்பாக இன்று விமான நிலையங்களில் அடிப்படை வசதிகள் மேம்பாடுதொடர்பான அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.
பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் அவரது தலைமையில் நடந்த இக்கூட்டத்தில்அமைச்சர்கள் பிரபுல் படேல், தயாநிதி மாறன், திட்டக் குழுத் துணைத் தலைவர்மாண்டேக் சிங் அலுவாலியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரபுல் படேல்,
சென்னை, கொல்கத்தா விமான நிலையங்களை நவீனமயமாக்க பிரதமர் தலைமையில்குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் குழு 3 மாதங்களில்நவீனமயமாக்கல் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கும்.
இதேபோல மதுரை, கோவை, தூத்துக்குடி உள்ளிட்ட நாடு முழுவதிலும் உள்ள 35விமான நிலையங்களையும் ரூ. 8,000 கோடி மதிப்பில் மேம்படுத்தவும் திட்டம்தீட்டப்படடுள்ளது.
இந்தத் திட்டம் 2008ம் ஆண்டுக்குள் நிறைவேற்றி முடிக்கப்படும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications