மோட்டோரோலா திட்டம்-நானே காரணம்: ஜெ
சென்னை:
சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் மோட்டோரோலா செல்போன் தயாரிப்புதொழிற்சாலை அமைய எனது ஆட்சியில்தான் உண்மையில் ஒப்பந்தம்போடப்பட்டது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலிலதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ. 135 கோடி செலவில் செல்போன் மற்றும் தொலைத் தொடர்புசாதனைங்களை உற்பத்தி செய்வதற்காக மோட்டோரோல நிறுவனத்துடன் கடந்த 7ம்தேதி ஒப்பந்தம் ஒன்றை தமிழக அரசு செய்து கொண்டிருப்பதாக செய்திகள்வந்துள்ளது.ஆனால் தமிழக முதலமைச்சராக நான் பதவி வகித்தபோதுதான் இந்தத் திட்டத்திற்கானபிள்ளையார் சுழி போடப்பட்டு கடந்த மார்ச் மாதம் பெரிய அளவில் திட்டம் தீட்டிஒப்பந்தமும் கையெழுத்தானது.
அப்போது என் முன்னிலையில், தைவான் நாட்டில் மின்னணு பொருள் உற்பத்தியில்முன்னணி வகிக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைமை செயல் நிர்வாகி டெர்ரிகோவ் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
அமெரிக்க தொலைத் தொடர்பு சாதன உற்பத்தி நிறுவனமான மோட்டோரோலாவும்,சிப்காட் நிறுவனமும் இணைந்து, ஸ்ரீபெரும்புதூரில் சிறப்பு பொருளாதார மையத்தைஇணைந்து அமைக்கவும் இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.
இந்தத் திட்டத்திற்குத தேவையான அனைத்து அடிப்படை பணிகளும் 2005ல்முடிக்கப்பட்டன.
இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலுககான தேர்தல் ஆணையத்தின் அறிவிக்கைவெளியானதைத் தொடர்ந்து விளம்பரம் இன்றி இந்த ஒப்பந்தம்மேற்கொள்ளப்பட்டது.
இதனை அரசு ஆவணங்கள மூலம் அறிந்து கொள்ள முடியும். இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டதற்கு வீடியோ, புகைப்பட ஆதாரங்களும் உண்டு.
இத்திட்டத்திற்கு ரூ. 485 கோடி ரூபாய் முதலீடு செய்ய ஃபாக்ஸ்கான் நிறுவனம் முன்வந்து இதன் மூலம் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க திடடமிடப்பட்டது.
ஆனால் இப்போது மோட்டோரோலா நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்டுள்ளஒப்பந்தத்தின் மூலம் 7,250 பேருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு கிடைக்கும்.
பெரிய திட்டத்திறகு என்னுடைய அரசே ஒப்பந்தம் செய்து கொண்டிருந்த நிலையில்இன்றைய அரசு மூல திட்டத்தில் ஒரு பகுதியை மட்டுமே செயல்படுத்த ஒப்பந்தம்செய்திருப்பது ஏன் என்பது குறித்து தமிழக அரசு மக்களுக்கு விளக்கம் அளிக்கவேண்டும்.
பிறர் தீட்டும் திட்டத்தின் மூலம் கிடைக்கும் பெயரை தட்டிச் செல்வது கருணாநிதிக்குவழக்கம். கடந்த மார்ச் மாதம் பெரிய திட்டத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ள போதிலும்,அதற்கான பெயர் எனக்குக் கிடைக்காமல் தேர்தல் ஆணையம் தடுத்து விட்டது.
இப்போது அந்தப் பெயரை தட்டிச் செல்லப் பார்க்கிறார் கருணாநிதி என்றுகூறியுள்ளார் ஜெயலலிதா.
இந்த அறிக்கையில், தமிழக முதலமைச்சராக நான் பதவி வகித்தபோதுதான்மோட்டோரோலா திட்டத்திற்கான பிள்ளையார் சுழி போடப்பட்டது என்று சொல்லும்ஜெயலலிதா,
ஃபாக்ஸ்கான் நிறுவனம் மூலம் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும்,ஆனால் இப்போது மோட்டோரோலா நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்டுள்ளஒப்பந்தத்தின் மூலம் 7,250 பேருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றுஇந்தத் திட்டத்தை குறையும் சொல்கிறார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications