அணை-கருணாநிதி, கேரள முதல்வர் நாளை பேச்சு
சென்னை:
முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை அதிகரிக்கும் விவகாரம் குறித்துமுதல்வர் கருணாநதியுடன், கேரள முதல்வர் அச்சுதானந்தன் நாளை சென்னையில்பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
கேரள, தமிழக எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணையில் தேக்கப்படும்நீரை தமிழகத்தின் ஐந்து மாவட்டங்கள் மற்றும் கேரளாவின் இடுக்கி மாவட்டவிவசாயிகள் பாசனத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.அணையின் உயரத்தை 152 அடி உயரத்திற்கு அதிகரிக்க வேண்டும் என்று தமிழகஅரசு கோரி வருகிறது. உச்சநீதிமன்றமும், அணையின் உயரத்தை தற்போதையஅளவான 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த உத்தரவிட்டுள்ளது.
இந்தப் பணிகளை தமிழக அரசே மேற்கொள்ளவும் அனுமதியளித்தது.
ஆனால் இந்தத் தீர்ப்பை ஏற்காத கேரள அரசு சட்டசபையில் அவசரச் சட்டத்தைபிறப்பித்து உச்சநீதிமன்றத் தீர்ப்பை செல்லாததாக்கி விட்டது.
இந் நிலையில் இப்பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்வருடன் பேச கேரள முதல்வர்அச்சுதானந்தன் முடிவு செய்துள்ளார்.
தற்போது ஹைதராபாத்தில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியசெயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள அச்சுதானந்தன் நாளை திருவனந்தபுரம்செல்லும் வழியில் சென்னை வருகிறார்.
அப்போது முதல்வர் கருணாநிதியை சந்தித்து முல்லைப் பெரியாறு அணை விவகாரம்தொடர்பாக விவாதிக்கிறார்.
இச் சந்திப்பின்போது, கோவை மத்திய சிறையில் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில்அடைக்கப்பட்டுள்ள கேரளாவைச் சேர்ந்த மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர்அப்துல் நாசர் மதானியை பரோலில் விடுதலை செய்ய ஆவண செய்யுமாறும்கருணாநிதியை அவர் கேட்டுக் கொள்ளவுள்ளார்.
கேரள பந்த்: தமிழக வாகனங்கள் முடக்கம்
இதற்கிடையே பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கேரளாவில் பாஜகசார்பில் இன்று பந்த் நடந்தது.
இதன் காரணமாக தமிழகத்திலிருந்து கேரளா சென்ற வாகனங்கள் அனைத்தும் தமிழக,கேரள மாநில எல்லையான களியக்காவிளை மற்றும் வாலையாறு ஆகிய இடங்களில்நிறுத்தப்பட்டுவிட்டன.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கேரளாவில் பாஜக சார்பில் இன்றுகாலை முதல் முழு அடைப்புப் போராட்டம் நடந்து வருகிறது. இதனால் கேரளாவினஅனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இயல்புநிலை முழுமையாக ஸ்தம்பித்துள்ளது.
இந்த முழு அடைப்பு காரணாக தமிழகத்திலிருந்து கேரளாவுக்குள் ஒரு வாகனுமும்அனுமதிக்கப்படவில்லை.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை வரை மட்டுமே வாகனங்கள்அனுமதிக்கப்பட்டன. அதேபோல கோவை மாவட்டம் வாலையாறு பகுதி வரைமட்டுவே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications