மேலும் 30 போலீஸ் அதிகாரிகள் மாற்றம்:டம்மி பதவியில் சைலேந்திர பாபு
சென்னை:
திருச்சி சரக டிஐஜியாக இருந்து வந்த சைலேந்திரபாபு உள்ளிட்ட 30 காவல்துறைஅதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் உயர் காவல் துறை அதிகாரியாக இருந்த மிகச் சிறந்த போலீஸ்அதிகாரியான சைலேந்திர பாபுவை திமுக ஆட்சிக்கு வந்தவுடன் திருச்சி சரகடிஐஜியாக நியமித்தது.இந் நிலையில் அவரை மேலும் கடுப்படிக்கும் வகையில் கரூர் தமிழ்நாடு காகிதலையின் தலைமை விஜிலன்ஸ் அதிகாரி என்ற டம்மி பதவிக்கு அரசு மாற்றியுள்ளது.
திருச்சி சரக டிஐஜியாக கந்தசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை விஜிலன்ஸ் மற்றும் லஞ்ச ஒழிப்பு பிரிவு இணை இயக்குனராக சஞ்சய்அரோரா நியமிக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம் சரக டிஐஜியாக ராஜீவ் குமார் மாற்றப்பட்டுள்ளார். வேலூர் சரக டிஐஜியாககுடவாலா நியமிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை ஆணையராக பிரஜ் கிஷோர் ரவி மாற்றப்பட்டுள்ளார்.
திருச்சி நகர ஆணையராக சுனில்குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். கோவை சட்டம்ஒழுங்கு துணை ஆணையராக சக்திவேல் மாற்றப்பட்டுள்ளார். சேலம் சட்டம் ஒழுங்குதுணை ஆணையராக சக்திவேலு நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவல்லிக்கேணி துணை ஆணையராக ராமசுப்பிரமணியும், மதுரை மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையராக நாகராஜனும் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னைஅமலாக்கப் பிரிவு கண்காணிப்பாளர் கலிமுல்லா கானும், தமிழக ஆளுனரின்மெய்க்காப்பாளராக ஆயுஷ் மணி திவாரியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பாளராக ரவீந்திரன், நாமக்கல்கண்காணிப்பாளராக ராஜேந்திரன், நீலகிரி கண்காணிப்பாளராக வித்யா குல்கர்னி,கடலூர் கண்காணிப்பாளராக சஞ்சய் குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர 7 டி.எஸ்.பிக்களுக்கு பதவி உயர்வு கொடுக்கப்பட்டு பல்வேறு இடங்களில்எஸ்பிக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications