ஜெயா டிவியின் மிமிக்ரி கலைஞர் மாயம்!
சென்னை:
ஜெயா டிவியில் குழந்தைகளுக்கான மிமிக்ரி நிகழ்ச்சியை நடத்தி வந்த வெங்கி என்றமிமிக்ரி கலைஞரை கடந்த 20 நாட்களாக காணவில்லை என அவரது மனைவி நிகிலாசென்னை காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்.
வெங்கி மங்கி என்ற பெயரில் அறியப்பட்டவர் வெங்கி. குரங்கு பொம்மையைகையில் வைத்துக் கொண்டு குரங்கு பேசுவது போல மிமிக்ரி செய்து பிரபலமானவர்.ஜெயா டிவியில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியையும் அவர் நடத்தி வந்தார்.அவரை கடந்த 20 நாட்களாக காணவில்லை என்று அவரது மனைவி நிகிலா மாநகரகாவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனது கணவருக்கு சில மாதங்களுக்கு முன்புதலையில் அடிபட்டது. அன்று முதல் அவரது நினைவாற்றலில் பிரச்சினை ஏற்பட்டது.அடிக்கடி மயங்கி விழுந்து விடுவார்.
கடந்த 20 நாட்களுக்கு முன்பு டெல்லி சென்றிருந்தார். அதன் பிறகு சில நாட்களஎன்னுடன் தொடர்பில் இருந்தார். அதன் பின்னர் அவரது செல்போன் இணைப்புதுண்டிக்கப்பட்டு விட்டது.
இதுகுறித்து எனது வீடு உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால்அதை ஏற்க அவர்கள் மறுத்து விட்டார்கள். டெல்லியில் காணாமல் போனதால் அங்குபோய்தான் புகார் கொடுக்க வேண்டும் என்று கூறி விட்டார்கள்.
இதனால் ஆணையரை நாடினேன். எனது புகாரைக் கேட்ட ஆணையர், அடையாறுதுணை காவல் ஆணையரிடம் இதுகுறித்து விசாரிக்குமாறு அறிவுறுத்தியிருப்பதாககூறினார் என்றார் நிகிலா கண்ணீருடன்.
வெங்கி காணாமல் போனது டிவி கலைஞர்கள் வட்டாரத்தில் சோகத்தைஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications