நான் விலை போகிறவன் அல்ல: வைகோ
சங்கரன்கோவில்:
நான் விலை போகிறவன் அல்ல என்பது நடுநிலையாளர்களுக்குத் தெரியும் என சங்கரன்கோவிலில் நடைபெற்றபொதுக்கூட்டத்தில் வைகோ கூறினார்.
சங்கரன்கோவிலில் ஜனநாயக மக்கள் கூட்டணி சார்பில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்தில் கலந்துகொண்டுஅவர் பேசியது:அதிமுக கூட்டணி களத்தை இழந்திருக்கிறோம், யுத்தத்தை இழக்கவில்லை.
ஒரு நாளைக்கு 22 மணி நேரம் உழைக்கிறேன். நான் விலைபோகிறவன் இல்லை என்பது நடுநிலையாளர்களுக்குதெரியும். தேர்தலில் நான் வைத்த குற்றச்சாட்டுக்கு திமுகவினர் இன்று வரை பதில் அளிக்கவில்லை. திமுகஅமைத்திருப்பது மைனாரிட்டி அரசு. 234 தொகுதிகளில் 118 தொகுதிகள் பெற்றிருந்தால் மைனாரிட்டி என்றுசொல்ல மாட்டோம்.
ஆனால் 93 தொகுதிகள் தான் பெற்றிருக்கிறீர்கள். இந்த தேர்தலில் திமுக வெற்றி பெறவில்லை. கூட்டணிதான்வெற்றி பெற்றுள்ளது. தேர்தலுக்கு முன் கருணாநிதி கூட்டணி அரசு பற்றி பேசினார். ஆனால் கூட்டணி அரசைஅமைக்கவில்லை.
அமைச்சரவையில் காங்கிரஸ் சேரவேண்டும் என்று சொல்லுங்கள். அவர்கள் விரும்பவில்லை என்றுசொல்லட்டும். ஆனால் அதற்கு முன் பாண்டிச்சேரியில் நாங்கள் காங்கிரசுக்கு ஆதரவு கொடுக்கிறோம். இங்குகாங்கிரஸ் திமுகவுக்கு ஆதரவு கொடுக்கிறது என்று சொல்லுகிறீர்கள். பாண்டிச்சேரி யூனியன் பிரதேசம் அங்குஆதரவு தாரவிட்டாலும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்.
மேற்கு வங்காளத்தில் பல ஆண்டுகளாக ஆட்சி நடத்தும் மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சியின் இப்போதையமுதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சர் பதவி கொடுத்திருக்கிறாரே.
திமுக அமைத்திருப்பது மைனாரிட்டி அரசு என்றால் கருணாநிதிக்கு கோபம் வருகிறது. தமிழக அரசியல்வரலாற்றில் இதுவரை எதிர்கட்சி வரிசையில் ஐந்தாறு சீட்டுளே இருக்கும். ஆனால் இன்றைக்கு 61 பேர் எதிர்கட்சிவரிசையில் இருக்கிறார்கள்.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற அன்றே எனக்கு கொலை மிரட்டல் வந்தன. என் வீட்டுக்கு முன் காரில் வந்துபட்டாசு வெடித்து கலவரம் செய்தார்கள். ஆனால் நான் என் வீட்டில் இருந்த தொண்டர்களைப் பொறுமையாகஇருக்குமாறு கேட்டுக் கொண்டேன்.
கொலை மிரட்டல் விடுத்த தொலைபேசி எண்ணை கண்டுபிடித்த போது, அது பெங்களூரில் இருக்கும் ஒருதொலைகாட்சி அலுவலக நம்பர். மற்ற நம்பர்கள் நாகர்கோவில், வேலூர், தூத்துக்குடி நகரங்களில் உள்ளபத்திரிகை அலுவலகத்தின் எண்கள்.
இதைவிட என் வீட்டு முன்பு காரில் வந்து வேண்டுமென்றே பட்டாசு வெடித்து ரகளையில் ஈடுபட்டவர்கள்திரும்ப சென்ற போது அந்த இடத்தில் ஒரு அடையாள அட்டை கிடந்தது. அந்த அடையாள அட்டையில்சபரிசன் வேதமூர்த்தி என்று இருந்தது. அது வேறு யாரும் இல்லை உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலினின்மருமகன்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து வருகிற ஜூன் 12ம் தேதி அதிமுக, மதிமுக மற்றும் கூட்டணிக்கட்சிகள் பங்கேற்கும் முதல் அறப்போராட்டம் மாவட்டத் தலைநகரங்களில் நடக்கிறது என்றும் மேலும்வாக்களித்த தமிழக மக்கள் அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications