வீரப்பன் காட்டில் புதிய கடத்தல்காரர்கள்-மீண்டும்யானைகள் கொலை-சந்தன கட்டைகள் கடத்தல்

Subscribe to Oneindia Tamil

சேலம்:

வீரப்பனின் சாம்ராஜ்யத்தின் கீழ் இருந்த வனப் பகுதிகளில் யானைகளைக் கொன்றுதந்தம் கடத்தியதாக 2 வழக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் சந்தன மர கடத்தலும்நடப்பதாகவும் புகார்கள் வருகின்றன.

சந்தனக் கடத்தல் வீரப்பன் கடந்த 2004ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டான். அவனதுமறைவால், தமிழக, கர்நாடக மாநில அரசுகளுக்கு இருந்து வந்த மிகப் பெரியதலைவலி நீங்கியது.

மேலும், வீரப்பன் ஆதிக்கம் செலுத்தி வந்த வனப் பகுதியிலும் யானையைக் கொன்றுதந்தம் திருடுவது, சந்தன மரக் கடத்தல் ஆகியவை வெகுவாக குறைந்தன.

ஆனால் தற்போது மீண்டும் வீரப்பன் நடமாடிய வனப் பகுதிகளில் கடத்தல்காரர்களின்அட்டகாசம் ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இங்குள்ள விலை உயர்ந்த பலமரங்கள், சந்தன மரங்களை சிலர் அவ்வப்போது வெட்டி செல்கின்றனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கண்டுகொள்ளாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

மேலும் யானைகளைக் கொன்று தந்தங்களைக் கடத்துவதும் நடந்து வருகிறது.இதுதொடர்பாக 2 வழக்குகள் பதிவாகியுள்ளன. பெண்ணாகரத்தில் யானையைக்கொன்றதாக ஒரு வழக்கும், மேட்டூரில், தந்தங்களை பதுக்கி வைத்திருந்ததாக ஒருவழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வீரப்பன் நடமாடிய வனப் பகுதிகள் அடர்ந்த காடுகள் அடங்கியவை ஆகும். வீரப்பன்இருந்த வரை இந்த பகுதிகளுக்குள் வனத்துறையினரோ, போலீஸாரோ நுழையமுடியாத நிலை இருந்து வந்தது.

வீரப்பன் மறைவுக்குப் பின்னர்தான் இந்த வனப் பகுதிகளில் குற்றச் செயல்கள்குறைந்தன. வனத்துறையினரும், காவல்துறையினரும் இணைந்து தீவிரக்கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

ஆனால் தற்போது இங்கு கடத்தல் செயல்கள் அதிகரித்து வருவதால்வனத்துறையினரும், காவல்துறையினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தகடத்தல்காரர்கள் அனைவரும் சிறு சிறு குழுவினர் என்றும், சிறிய அளவிலேயேஅவர்கள் கடத்தலில் ஈடுபடுவதும் தெரிய வந்துள்ளது.

முதலில் வீரப்பனுக்கு பயந்து இந்தக் கும்பல்கள் காட்டுப் பக்கமே எட்டிப் பார்க்காமல்இருந்தது. இப்போது வீரப்பன் இல்லை என்ற தைரியம் இவர்களை யானைகளைக்கொல்ல வைத்துள்ளது.

தொடக்கத்திலயே காவல்துறையினரும், வனத்துறையினரும் விழிப்புடன் இருந்துஇந்த கடத்தல்காரர்களை கட்டுப்படுத்தாவிட்டால் மீண்டும் சில வீரப்பன்கள் இங்குஉருவாகலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+