பீர் தொழிற்சாலை-கலெக்டரிடம் விஜயகாந்த் மனு
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் முந்திரியிலிருந்து பீர் தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவவேண்டும் என்று கோரி தேமுதிக தலைவரும், விருத்தாச்சலம் தொகுதிஎம்.எல்.ஏவுமான விஜயகாந்த் மனு கொடுத்தார்.
விஜயகாந்த் இன்று காலை கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ககந்தீப் சிங் பேடியைசந்தித்து தனது தொகுதி தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவைக்கொடுத்தார்.மணிமுத்த ஆற்றுப் பாலத்தை சீரமைக்க வேண்டும், விருத்தாச்சலம் அரசுமருத்துவமனையை சீரமைத்து, புதுப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகள் அதில் இடம்பெற்றிருந்தன.
பின்னர் கடலூர் அரசினர் விருந்தினர் இல்லத்தில் செய்தியாளர்களிடம் விஜயகாந்த்பேசுகையில்,
கடலூர் மாவட்டத்தில் குறிப்பாக விருத்தாச்சலத்தில் முந்திரி விளைச்சல் அபரிமிதமாகஉள்ளது. எனவே இதைப் பயன்படுத்தி முந்திரியிலிருந்து பீர் தயாரிக்கும்தொழிற்சாலையை விருத்தாச்சலத்தில் அமைக்கக் கோரியுள்ளேன்.
இந்த தொழிற்சாலை வந்தால் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இதேபோலபீங்கான் தொழிற்சாலையையும் தொடங்க கோரிக்கை விடுத்துள்ளேன்.
சட்டசபையைப் பொருத்தவரை நான் புதுமுகமாகவே இருக்கிறேன். இன்னும் சிலமாதங்கள் போனால்தான் சட்டசைபக் கூட்டத் தொடரில் என்னால் முழுமையாககலந்து கொண்டு செய்லபட முடியும்.
அனைத்துக் கட்சியினரையும் நான் நண்பர்களாகவே பார்க்கிறேன். யாரும் எனக்குஎதிரி இல்லை என்றார் விஜயகாந்த்.
கலெக்டரை விஜயகாந்த் சந்தித்தபோது கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டிராமச்சந்திரன் உடன் இருந்தார்.
ஓவர் நியாயம் பேசுபவராயிற்றே என்பதால், கடந்த தேர்தலில் உங்கள் கட்சிஎவ்வளவு செலவு செய்தது என்று ஒரு நிருபர் கேட்டபோது, கோமான விஜய்காந்த்..மொதல்ல திமுக, அதிமுக கிட்ட போய் இந்த கேள்விய கேட்டுட்டு எங்கிட்ட வாங்கஎன்றார். (அப்ப அவுங்களும் நீங்களும் ஒன்னு தானா?)
உங்கள் கட்சி உட்கட்சிப் பூசல் என்று ஒரு நிருபர் கேள்வி எழுப்பியபோது.. எந்தக்கட்சியில உட்கட்சிப் பூசல் இல்ல என்று கோபத்துடன் பதில் தந்தார்.
ஈழத் தமிழர் விவகாரத்தில் உங்கள் நிலை என்ன என்ற கேள்விக்கு பதிலே தரவில்லைவிஜய்காந்த்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications