குற்றலாத்தில் ஆட்டோ டிரைவர்கள் மீது அழகிரியின் மகன், நண்பர்கள் தாக்குதல்?
திருநெல்வேலி:
முதல்வர் கருணாநிதியின் பேரனும் (அழகிரியின் மகன்) அவரது நண்பர்களும் தங்களைத் தாக்கியதாக குற்றாலம்ஆட்டோ டிரைவர்கள் இருவர் குற்றம் சாட்டியுள்ளனர்.
அழகிரியின் மகன் தனது நண்பர்களுடன் குற்றாலத்திற்கு காரில் சென்றுள்ளார். குற்றாலம் பஸ் ஸ்டாண்டில்ஆட்டோ டிரைவர்களுக்கும் அழகிரியின் மகனுடன் வந்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.இதையடுத்து அழகிரியின் மகனும் அவரது நண்பர்களும் ஆட்டோ டிரைவர்களை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த ஆட்டோ டிரைவர் முருகன், ஈஸ்வரன் ஆகியோர் இச் சம்பவம் குறித்து போலீசில் புகார்கொடுத்தும் அவர்கள் வழக்குப்பதிவு செய்யவில்லை என்று தெரிகிறது.
இது குறித்து ஆட்டோ டிரைவர் முருகன் கூறுகையில்,
இரவு 11.30 மணிக்கு பஸ் ஸ்டாண்டில் எனது ஆட்டோவை கழுவிக் கொண்டிருந்தேன். அப்போது மாருதி கார்வந்தது. அதில் இருந்தவர்கள் குடிபோதையில் இருந்தனர். போதையில் அவர்கள் காரில் வாந்தி எடுத்திருந்ததால்அதனை கழுவ நான் கழுவிக் கொண்டிருந்த தண்ணீர் பம்பு அருகே வந்தனர்.
நான் பயன்படுத்திய பிளாஸ்டிக் குடத்தை கார் கழுவ கேட்டனர். நானும் கொடுத்தேன். காரை கழுவிய பிறகுகுடத்தை திருப்பி தராமல் தண்ணீரோடு தூக்கிப்போட்டு விளையாடினர். கடைசியில் குடத்தை கீழே போட்டு
இதையடுத்து எனக்கும் அவர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அப்போது இவர் யார் தெரியுமா?.அழகிரியின் மகன் என்று காரில் இருந்தவரைக் காட்டிக் கூறியதோடு என்னை தாக்கிவிட்டுச் சென்றனர்.
சிறிது நேரத்தில் குற்றாலம் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகச்சாமி, ஏட்டையா மாரியப்பன் ஆகியோர் அங்குவந்தனர். போலீசார் எனது கைகளை பிடித்துக் கொள்ள அழகிரியின் மகனும் அவரது நண்பர்களும் என்னைகடுமையாகத் தாக்கினர்.
அப்போது எனக்கு ஆதரவாக பேசிய ஆட்டோ டிரைவர் ஈஸ்வரனையும் தாக்கினர்.
பின்னர் எங்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிச்சென்றனர். அங்கு நாங்கள் கொடுத்த புகாரை வாங்காமல்,இனிமேல் நாங்கள் மேற்கொண்டு இந்த விஷயத்தில் புகார் கொடுக்க மாட்டோம் என எழுதி கையெழுத்துவாங்கினர்.
அதற்கு பிறகு நாங்கள் இருவரும் தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்ந்தோம். அங்கு வந்த போலீசார்எங்களிடம் பிரச்னையை இத்தோடு விட்டுவிடுமாறும் மேற்கொண்டு யாரிடமும் சொல்ல கூடாது என கூறினர்.
இந்தச் சம்பவம் குறித்து எஸ்.பி. சோமானி கூறுகையில், குற்றாலத்தில் இரவில் ஆட்டோ டிரைவர்களுக்கும் நான்குநபர்களுக்கும் இடையே தகராறு நடந்துள்ளது உண்மைதான். அதில் போலீசார் சமாதானம் செய்துள்ளனர்.ஆனால் அதில் மு.க.அழகிரியின் மகன் இருந்தாரா என்பது தெரியவில்லை என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications