ஜூலை முதல் வாரத்தில் தமிழக பட்ஜெட்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக பட்ஜெட் வரும் ஜூலை முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
சட்டசபை ஆயுள் முடிவடைய இருந்ததால் கடந்த பிப்ரவரியில் 2006-07க்கான இடைக்கால பட்ஜெட்டைஅதிமுக அரசு தாக்கல் செய்தது. இப்போது புதிய அரசு பொறுப்பேற்றுள்ளதால் முழுமையான பட்ஜெட் தாக்கல்செய்யப்பட வேண்டும்.இதையடுத்து பட்ஜெட் தயாரிக்கும் பணியில் முதல்வர் கருணாநிதியும் திட்டக் கமிஷன் துணைத் தலைவர்நாகநாதனும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக அனைத்துத் துறைகளின் செயலாளர்களுடனும்நாகநாதன் ஆலோசனைகள் நடத்த ஆரம்பித்துள்ளார்.
இதையடுத்து 5 மூத்த அமைச்சர்களைக் கொண்ட மாநில நிதிக் குழு கூடி பட்ஜெட்டுக்கு உறுதி வடிவம்கொடுக்கும். இதன் பின்னர் ஜூலை முதல் வாரத்தலேயே பட்ஜெட் தாக்கலாகிவிடும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications