மோட்டோரோலா-ஜெ மீது கருணாநிதி பாய்ச்சல் அமெரிக்கா வருமாறு பில்கேட்ஸ் கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக அரசு கடந்த 7ம் தேதி மோட்டோராலா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்ட செய்தியைப் படித்தஜெயலலிதா அந்த ஒப்பந்தம் தனது ஆட்சியில் போடப்பட்டது என்றும் அந்த ஒப்பந்தம் தற்போது மீண்டும்போடப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

"ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்று ஒரு பழமொழி உள்ளது. அது ஜெயலலிதாவுக்கு முழுவதுமாகப்பொறுந்தும்.

அவர் தனது ஆட்சியில் ஒப்பந்தம் செய்ததாக கூறியிருப்பது "பாக்ஸ்கான் என்ற நிறுவனத்துடன். தற்போதுநாங்கள் செய்துள்ள ஒப்பந்தம் "மோட்டோராலா நிறுவனத்துடன்.

இவை இரண்டுமே தமிழகத்தில் தனித்தனியாக தொழில் தொடங்க வந்த கம்பெனிகள். மோட்டோராலாஅமெரிக்க கம்பெனி. பாக்ஸ்கான் தைவான் கம்பெனி.

இவற்றின் உரிமையாளர்கள், நிர்வாகிகள், செயல்பாடு ஆகிய அனைத்தும் வெவ்வேறானவை. எனவே,இரண்டும் தொடர்புடையது என்று எந்தவிதத்திலும் கூற இயலாது.

பாக்ஸ்கான் நிறுவனத்துடன் கடந்த ஆட்சியில் மார்ச் 3ம் தேதி ஒப்பந்தம் போடப்பட்டதை நாம் மறுக்கவில்லை.பாக்ஸ்கான் நிறுவனம் சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பிரிவில் நிலம் கோரியது. அதற்கு குறைந்தது 250ஏக்கர் நிலம் தேவைப்படும். ஆனால், பாக்ஸ்கான் 100 ஏக்கர் மட்டுமே கோரியதால் அந்த பிரிவுக்குள் சேர்க்கஇயலாமல் இருந்தது.

அப்போது மோட்டோராலா பேச்சு வார்த்தை ஆரம்பக் கட்டத்தில் இருந்தது. எனவே, இரண்டையும் இணைத்து250 ஏக்கர் நிலம் ஒதுக்கி அதை சிறப்பு பொருளாதார மண்டலப் பிரிவுக்குள் வர ஆலோசிக்கப்பட்டது.

அதற்கு மத்திய அரசின் ஒப்புதல் கோரி விண்ணப்பிக்கப்பட்டு கிடைக்கச் செய்வதற்கான முனைப்பில் திமுகஅரசு ஈடுபட்டுள்ளது. அது இன்னும் ஒரு வாரத்திற்குள் கிடைக்கும்.

ஜெயலலிதா கூறியுள்ளபோல அமைச்சரவையில் பாக்ஸ்கான் நிறுவனம் பற்றி விவாதிக்கப்பட்டதே தவிர,மோட்டோராலா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துக் கொள்வது பற்றியோ, அனுமதி கொடுப்பது பற்றியோஎந்தவித விவாதமும் நடக்கவில்லை.

அவர் கொண்டு வந்த திட்டத்தில் ஒரு சிறிய பகுதியை நாங்கள் கொண்டு வருகிறோம் என்று கூறுவது முற்றிலும்தவறான செய்தி. அந்த திட்டத்திற்கும் தற்போதைய மோட்டோராலா திட்டத்திற்கும் சம்பந்தமே இல்லை. அதுவேறு திட்டம், இது வேறு திட்டம்.

ஜெயலலிதா குறிப்பிடும் பாக்ஸ்கான் திட்டத்தையும் இந்த அரசு வரவேற்கவே செய்கிறது. அது தமிழகத்தில்அமைந்திட தேவையானவற்றை அரசு வழங்கும்.

நான் அடுத்தவர் திட்டத்திற்கு உரிமை கொண்டாடுவது போல் கூறியிருக்கிறார்.

அடுத்தவருக்கு உரிமையானதை சொந்தம் கொண்டாடுவது யார் என்பதை தமிழகம் நன்கறியும். அப்படிகொண்டாடியது தவறு என்று "டான்சி வழக்கில் உச்ச நீதிமன்றமே தெளிவுபடுத்தியிருக்கிறது என்று கூறியுள்ளார்கருணாநிதி.

கருணாநிதிக்கு பில்கேட்ஸ் அழைப்பு:

இதற்கிடையே நடந்து முடிந்த தேர்தலில் வென்று முதல்வராகப் பொறுப்பேற்ற கருணாநிதிக்கு வாழ்த்துத்தெரிவித்தும் அவரை அமெரிக்கா வருமாறு அழைப்பு விடுத்தும் மைக்ரோசாப்ட் தலைவர் பில் கேட்ஸ் கடிதம்அனுப்பியுள்ளார்.

தேர்தலுக்கு முன் சென்னை வந்த கேட்ஸ், மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் அழைப்பின்பேரில்கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டுக்குச் சென்று அவரை சந்தித்தார்.

இந் நிலையில் கருணாநிதிக்கு கேட்ஸ் அனுப்பியுள்ள கடிதத்தில், மீண்டும் முதல்வரானதற்கு வாழ்த்துக்கள். கல்வி,இ-கவர்னன்ஸ், கிராம வளர்ச்சி ஆகியவற்றில் உங்கள் அரசுடன் இணைந்து செயல்பட விரும்புகிறேன்.அமெரிக்காவில் மைக்ரோசாப்ட் தலைமையகத்துக்கு நீங்கள் வருகை தந்தால் மிகவும் மகிழ்வேன் என்றுகூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+