டீசல் விலை: 13ம் தேதி லாரிகள் ஸ்டிரைக்: கேஸ், காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும்
நாமக்கல்:
மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் 13ம் தேதி (செவ்வாய் கிழமை) காலை6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை 1.5 லட்சம் லாரிகள் ஒடாது என தமிழக லாரி அதிபர்கள் சம்மேளனத்தின் தலைவர்செங்கோடன் தெரிவித்துள்ளார்.
இதனால் காய்கறிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயரவும், தட்டுப்பாடு ஏற்படவும்வாய்ப்புள்ளது.பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதை எதிர்த்து பல்வேறு கட்சிகள், அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
வரும் 12ம் தேதி அதிமுக கூட்டணி சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடக்கிறது.சென்னையில் நடைபெறும் போராட்டத்திற்கு ஜெயலலிதா தலைமை தாங்குகிறார்.
இந் நிலையில் தமிழ்நாட்டில் வரும் 13ம் தேதி லாரிகளும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன. காலை 6 மணி முதல் மறுநாள்காலை 6 மணி வரை 1.5 லட்ச லாரிகள் ஸ்டிரைக்கில் பங்கேற்கின்றன. சரக்கு லாரிகள் தவிர பெட்ரோல், டீசல் மற்றும் சமையல்காஸ் ஏற்றிச் செல்லும் லாரிகளும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்கின்றன.
தமிழகம் மட்டுமின்றி தென் மாநிலங்கள் அனைத்திலும் காஸ் ஏற்றிச் செல்லும் 4,000 லாரிகளும் வேலை நிறுத்தத்தில்ஈடுபடுகின்றன.
இது குறித்து மாநில லாரி அதிபர்கள் சம்மேளனத்தின் தலைவர் செங்கோடன் கூறுகையில்,
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நாங்கள் வாடகையை உயர்த்தினால் பொதுமக்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவர். மேலும்லாரி தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. விலை உயர்வால் தொழில் முடங்கி அவர்களும் பாதிக்கபட்டுஉள்ளனர்.
இதனை கருத்தில் கொண்டு இந்த விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும். மாநில அரசு விற்பனை வரியையும், மத்திய அரசுஇறக்குமதி வரியையும் குறைத்தாலே பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தி விடலாம். இதை மத்திய, மாநிலஅரசுகள் செய்ய வேண்டும் என்றார்.
ஆனால், பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரியைக் மாநில அரசு குறைக்காது என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications